Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம்
15 நிமிசத்துல செய்யக்கூடிய செட்டிநாடு வெங்காய குழம்பு ரெசிபி...செஞ்சு பாருங்க...சாதத்துக்கு சூப்பரா இருக்கும்!
Vengaya Kara Kulambu Recipe in Tamil: தினமும் ஒரே மாதிரியான புளிக்குழம்பு, சாம்பார் செய்வது சாப்பிடுபவர்களுக்கு மட்டுமின்றி உங்களுக்கும் போரடிக்க தொடங்கியிருக்கும். அப்படியானால் ஒரு நாள் செட்டிநாடு ரெசிபிக்களை முயற்சி செய்யுங்கள். அதுவும் செட்டிநாடு ஸ்டைல் வெங்காய மசாலா குழம்பை முயற்சி செய்து பாருங்கள். ஏனெனில் வெங்காயம் என்பது அனைத்து சமையலறைகளிலும் இருக்கும் ஒரு அத்தியாவசிய பொருளாகும்.
பெரிய வெங்காயமும், சின்ன வெங்காயமும் சேர்ந்து செய்யும் இந்த செட்டிநாடு ஸ்டைல் கார குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். உங்களுக்கு செட்டிநாடு ஸ்டைல் வெங்காய மசாலா கார குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அதற்கான ரெசிபியை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- பெரிய வெங்காயம் - 2
- சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு
- தக்காளி - 2
- பூண்டு - 6 பற்கள்
- வர மிளகாய் - 10
- சர்க்கரை - ஒரு சிட்டிகை
- நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- கடுகு - அரை ஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - அரை ஸ்பூன்
செய்முறை:
- முதலில் தேவையான அனைத்து பொருட்களையும் கொடுக்கப்பட்ட அளவில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- சின்ன வெங்காயம் மற்றும் பூண்டைத் தோலுரித்து வைக்கவும். பெரிய வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- வர மிளகாயில் உள்ள விதையை நீக்கிவிட்டு தண்ணீரில் போட்டு கால் மணி நேரம் ஊற வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம், பூண்டு
சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து குழைய வதக்கவும்.
- வதக்கியவற்றைச் சிறிது நேரம் ஆறவிட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
- ஒரு சுற்று சுற்றிய பிறகு ஊற வைத்துள்ள மிளகாயைச் சேர்த்து மென்மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, பெரிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- நன்றாக வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது தேவையெனில் ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து 2 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருந்து இறக்கவும்.
- சுவையான காரசாரமான வெங்காய மசாலா குழம்பு ரெடி. வறுத்த அப்பளம் அல்லது முட்டைகோஸ் அல்லது கேரட் பொரியல் போன்றவை இதற்கு சரியான சைடிஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications