Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பாவக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
World Meningitis Day 2026: காய்ச்சல், தலைவலி இருக்கா? மூளைக்காய்ச்சலா இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
2026 ராகு பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப் போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
மாத்திரைகள் ஏன் அலுமினியம் ஃபாயில்களில் மட்டுமே பேக் செய்யப்படுகிறது - அதன் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்த கஞ்சியை அடிக்கடி காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை மடமடன்னு வேகமா குறையும்.. -
அக்டோபர் 05 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பல ஆசைகள் நிறைவேறப்போகுதாம் -
ஆயில்யம் நட்சத்திரம் செல்லும் குரு பகவான்: அக்டோபர் 08 முதல் இந்த 3 ராசிக்கு கஷ்டங்கள் குறையும்! -
டீக்கடை கடலைப்பருப்பு பக்கோடா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்க.. -
ஆரஞ்சு பழத் தோலை இனி தூக்கிப் போடாம.. இப்படி யூஸ் பண்ணுங்க.. முகம் வெள்ளையா பளிச்சுன்னு மின்னும்.. -
புரட்டாசி ஸ்பெஷல் சோயா காளான் சுக்கா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
வெள்ளைப்பூசணி இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு வேற லெவல்-ல இருக்கும்..
Vellai Poosani Chutney Recipe In Tamil: கோடையில் வெயில் கொளுத்தும் வேளையில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்ள வேண்டும். அப்படி எடுக்கும் போது உடல் நீரேற்றத்துடன் இருக்கும். அப்படி நீர்ச்சத்து அதிகம் நிறைந்த ஒரு காய்கறி தான் வெள்ளைப் பூசணிக்காய். இந்த வெள்ளைப்பூசணியை பொதுவாக சாம்பார் தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் அந்த வெள்ளைப் பூசணியைக் கொண்டு சட்னி கூட செய்யலாம் என்பது தெரியுமா?

இந்த சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். உங்களுக்கு தினமும் ஒரே மாதிரியான சட்னியை செய்து போரடித்துவிட்டால், ஒருமுறை இப்படி வித்தியாசமான சட்னியை செய்யுங்கள். நிச்சயம் இந்த சட்னி புதுமையாக இருக்கும். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.
இந்த வெள்ளைப்பூசணி சட்னி ரெசிபி குறித்து rk_recipes_bowl என்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த வெள்ளை பூசணி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெள்ளைப்பூசணி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெள்ளைப் பூசணி - 1/2 கிலோ
* தக்காளி - 4 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* பூண்டு - 4 பல்
* சின்ன வெங்காயம் - 1 கையளவு
* தண்ணீர் - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - 1 கொத்து
செய்முறை:
* முதலில் வெள்ளைப் பூசணிக்காயை சிறு துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் குக்கரில் நறுக்கிய வெள்ளைப்பூசணி மற்றும் தக்காளியை
சேர்க்க வேண்டும்.
* அதன் பின் அதில் பச்சை மிளகாய், பூண்டு, சின்ன வெங்காயம் சிறிது,
தண்ணீரை சேர்க்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சுள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, குக்கரை
மூடி 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும்
கொத்தமல்லியை சேர்த்து, மத்து கொண்டு நன்கு மசித்து விட வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, மசித்து வைத்துள்ள வெள்ளைப்பூசணி
சட்னியுடன் சேர்த்து கலந்தால், சுவையான வெள்ளைப்பூசணி சட்னி
தயார்.



Click it and Unblock the Notifications
