Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
வெங்காய கொத்தமல்லி சட்னி
இட்லி, தோசை போன்றவற்றிற்கு தினமும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி என்று செய்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாக வெங்காய கொத்தமல்லி சட்னியை செய்து சுவைத்துப் பாருங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும்.
சரி, இப்போது அந்த வெங்காய கொத்தமல்லி சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4-5 (நறுக்கியது)
பூண்டு - 5-6 பற்கள்
கொத்தமல்லி - 1 கப்
உப்பு - தேவையான அளவு
புளிச்சாறு - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி, பின் கொத்தமல்லியையும் சேர்த்து வதக்கி இறக்க வேண்டும்.
பின் மிக்ஸியில் அந்த வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் புளிச்சாற்றினையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, பின் அதில் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து கிளறி இறக்கினால், வெங்காய கொத்தமல்லி சட்னி ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
