Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ப்ராக்கோலி சால்ட் அண்ட் பெப்பர் ரெசிபி
காலிஃப்ளவர் போன்று பச்சை நிறத்தில் இருக்கும் ஓர் காய்கறி தான் ப்ராக்கோலி. பலரும் இந்த காய்கறியைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் எப்படி சமைத்து சாப்பிடுவது என்று தெரியாமல் பலரும் இதை வாங்கமாட்டார்கள். அத்தகையவர்களுக்கு தமிழ் போல்ட்ஸ்கை ப்ராக்கோலியை எப்படி சமைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் என்று கொடுத்துள்ளது.
அதுவும் ப்ராக்கோலி சால்ட் அண்ட் பெப்பர் ரெசிபியை இங்கு கொடுத்துள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ப்ராக்கோலி - 2 கப் (சுத்தம் செய்தது)
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
மைதா - 1 1/2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
பூண்டு - 2 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1/4 கப்
தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் சுத்தம் செய்து வைத்துள்ள ப்ராக்கோலியைப் போட்டு, உப்பு சேர்த்து 1 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பௌலில் மைதா, சோள மாவு, 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, வேக வைத்துள்ள ப்ராக்கோலியை சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ப்ராக்கோலியை போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்
பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடேற்றி, பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
பின் அதில் மிளகுத் தூள், உப்பு மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து நன்கு கிளறி, பொரித்து வைத்துள்ள ப்ராக்கோலியை சேர்த்து ஒருமுறை பிரட்டிவிட்டு இறக்கினால், ப்ராக்கோலி சால்ட் அண்ட் பெப்பர் ரெடி!!!
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications
