Latest Updates
-
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்..
பேச்சுலர் சாம்பார்
இதுவரை நீங்கள் பருப்பு சேர்த்து தான் சாம்பார் செய்திருப்பீர்கள். ஆனால் பருப்பு சேர்க்காமல் சாம்பார் செய்து சுவைத்ததுண்டா? ஆம், பருப்பு சேர்க்காமல் கூட சாம்பார் செய்யலாம். இதனை பேச்சுலர் சாம்பார் என்று சொல்லலாம். இம்மாதிரியான சாம்பார் வீட்டில் பருப்பு தீர்ந்துவிட்டால் வைக்க உதவும்.
மேலும் இது பேச்சுலர்களுக்கு ஏற்ற ஓர் அற்புதமான ரெசிபி. சரி, இப்போது அந்த பேச்சுலர் சாம்பரை எப்படி செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய - 1 (நீளமாக கீறியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
சாம்பார் பவுடர் - 2-3 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, சிறிது உப்பு தூவி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி, சாம்பார் பொடி சேர்த்து கிளறி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதிக்க விட வேண்டும்.
பிறகு சர்க்கரை சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
இறுதியில் கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறினால், பேச்சுலர் சாம்பார் ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
