Latest Updates
-
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க...
சத்தான... வாழைத்தண்டு சூப்
மாலை வேளையில் எப்போதும் காபி, டீ குடித்து போர் அடித்திருந்தால், இன்று உங்கள் வீட்டில் சூப் செய்து குடியுங்கள். அதுவும் வாழைத்தண்டு சூப் செய்து குடியுங்கள்.
மாலை வேளையில் எப்போதும் காபி, டீ குடித்து போர் அடித்திருந்தால், இன்று உங்கள் வீட்டில் சூப் செய்து குடியுங்கள். அதுவும் வாழைத்தண்டு சூப் செய்து குடியுங்கள். வாழைத்தண்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் அது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் மற்றும் உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும் வாழைத்தண்டில் நீர்ப்பெருக்கி பண்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றும்.

அதோடு வாழைத்தண்டு சூப்பில் கொழுப்பு குறைவு மற்றும் செரிமான மண்டலத்தாலும் எளிதில் செரிமானமாகக் கூடியவை. இப்போது வாழைத்தண்டு சூப் எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: ருசியான... இளநீர் பாயாசம்
தேவையான பொருட்கள்:
* வாழைத்தண்டு - 1 கப் (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* சீரகப் பொடி - 1/4 டீபூன்
* மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
* எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு..
* எண்ணெய் - 1 டீபூன்
* கடுகு - 1/2 டீபூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் வாழைத்தண்டில் உள்ள நார் பகுதியை நீக்கிவிட்டு, பின் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* நறுக்கிய வாழைத்தண்டை மோரில் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும்.
* பின்பு ஒரு குக்கரில் நறுக்கிய வாழைத்தண்டு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் 2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* வாழைத்தண்டு மென்மையாக வெந்ததும், அதில் உள்ள நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.
* பிறகு வேக வைத்துள்ள வாழைத்தண்டை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீர் அல்லது வாழைத்தண்டு வேக வைத்த நீரை ஊற்றி அரைத்து வடிகட்டிக் கொண்டு, பின் அதை எஞ்சிய வாழைத்தண்டு வேக வைத்துள்ள நீருடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
* பின் அந்த கலவையை அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைக்கவும். அதே சமயம் மற்றொரு அடுப்பில், வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அடுப்பில் வைத்துள்ள சூப்புடன் சேர்த்துக் கொள்ளவும்.
* பின்பு சீரகப் பொடி, உப்பு, மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை சூப்புடன் சேர்த்து கலந்து, மேலே சிறிது கொத்தமல்லியைத் தூவினால், சுவையான வாழைத்தண்டு சூப் தயார்.
Image Courtesy: padhuskitchen



Click it and Unblock the Notifications











