Latest Updates
-
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
ஆந்திரா ஸ்பெஷல் வறுத்த பூண்டு சட்னி... இப்படி செஞ்சு பாருங்க... இட்லி, தோசைக்கு கொல மாஸா இருக்கும்...!
Varutha Poondu Chutney Recipe in Tamil: தினமும் இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி மற்றும் கார சட்னி என ஒரே மாதிரி சட்னி சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான மற்றும் காரமான சட்னியை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தக்காளி மற்றும் பூண்டு உள்ளதா? அப்படியானால் இந்த ஆரோக்கியமான வறுத்த பூண்டு தக்காளி கார சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகவும் பிரபலமானது.
வறுத்த பூண்டு தக்காளி சட்னி ரெசிபி என்பது பூண்டை முக்கிய மூலப்பொருளாக வைத்து அரைக்கப்படும் ஒரு காரசாரமான சட்னியாகும். வறுத்த பூண்டு சட்னி என்பது ஒரு காரமான மற்றும் புளிப்பான சட்னியாகும். இது இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷாகும். இந்த வறுத்த பூண்டு சட்னியானது மழைக்காலத்தில் சாப்பிட ஏற்றது. இதில் மருத்துவ குணங்கள் அதிகமாக உள்ளன. மழைக்காலத்தில் அதிகமாக உணவில் சேர்க்கும் போது, நோயெதிர்ப்பு சக்தி வலுவடைந்து, அடிக்கடி நோய்வாய்ப்படுவதைத் தடுக்கலாம்.

உங்களுக்கு வறுத்த பூண்டு தக்காளி சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வறுத்த பூண்டு தக்காளி சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையானப் பொருட்கள்:
- உரித்த பூண்டு - 1 கப்
- தக்காளி -
- வரமிளகாய் - 5
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- எண்ணெய் - 1 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - 1 டீஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- கறிவேப்பிலை - 1 கொத்து
- வர மிளகாய் -
- பெருங்காயம் - 1 சிட்டிகை
செய்முறை:
- முதலில் பூண்டை உரித்து நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கி வர மிளகாய் மற்றும் பூண்டு பற்களை பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அதே வாணலியில், தக்காளி, புளி ஆகியவற்றை போட்டு தக்காளி நன்கு குலையும் வரை வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் வறுத்த பூண்டு பற்கள், சிவப்பு மிளகாய், தக்காளி, புளி மற்றும் உப்பு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட்டு மென்மையாக அரைத்து ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.
- சட்னியை தாளிக்க ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகைச் சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு பொரிந்ததும் வர மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் இந்த தாளிப்பை சட்னி மீது கொட்டி கிளறினால் காரமான வறுத்த பூண்டு சட்னி ரெடி.
- இந்த வறுத்த பூண்டு சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
