Latest Updates
-
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் ஆரோக்கியமான உளுந்து சட்னி... செஞ்சு பாருங்க இரும்பு எலும்பு மாறி மாறும்!
Ulundu Chutney Recipe in Tamil: எலும்பை இரும்பு போல் பலம் பெற செய்வதில் உளுந்து முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் இருக்கும் கால்சியம் மற்றும் மெக்னிசியம் முதுகு எலும்பை பலப்படுத்துவதால் பெண்களுக்கு ஏற்படும் முதுகு வலி பிரச்சனைக்கு நல்ல தீர்வை தரக் கூடியது. இதில் இருக்கும் இரும்பு சத்து இரத்த சோகையை விரட்டுவதில் முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் இது செரிமான பிரச்சனைகளை சரி செய்கிறது. இது வயது வந்த பெண் குழந்தைகள் மற்றும் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு தேவையான ஃபோலிக் ஆசிடையும் கொண்டிருக்கிறது. இவ்வளவு பயன்களை கொண்டிருக்கும் உளுந்தை வைத்து எப்படி சுவையாய் சட்னி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
- உளுத்தம் பருப்பு - ¼ கப்
- பச்சை மிளகாய் - 5
- தேங்காய் - ½ மூடி (சிறியது)
- சின்ன வெங்காயம் - 6
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- பூண்டு - 5
- கறிவேப்பிலை - 1 கொத்து
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ½ டீ ஸ்பூன்
- கடலை பருப்பு - ½ டீஸ்பூன்
- உளுந்து பருப்பு - ½ டீஸ்பூன்
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
- தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ வைத்து கொள்ளவும்.
- பூண்டு மற்றும் வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் உளுந்தம் பருப்பு சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- மிதமான தீயில் உளுந்து கருகி விடாமல் நன்றாக வறுக்கப்பட வேண்டியது அவசியம்.
- வெங்காயம், பூண்டு, மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வறுக்கவும். அதனுடன் கருவேப்பிலை மற்றும் புளி சேர்த்து நன்கு வறுக்கவும்.
- கடைசியாக துருவிய அல்லது நறுக்கிய தேங்காய் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
- அதை வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றி நன்கு ஆற விடவும். நன்றாக ஆறியதும் மிக்ஸி ஜாருக்கு மாற்றவும்.
- அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
- மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் தாளிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடவும்.
- கடுகு பொரிந்ததும் கடலைப் பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- கடைசியாக பெருங்காயம் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
- அரைத்து வைத்த சட்னி உடன் தாளிப்பை சேர்த்து நன்கு கிளறினால் இட்லி தோசைக்கு சுவையான உளுந்து சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications
