Latest Updates
-
பூர நட்சத்திரத்திற்குள் நுழையும் சூரியனால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ரக்ஷா பந்தன் நாளில் உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
Dengue: அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. எச்சரிக்கும் டாக்டர்! -
கொங்கணி ஸ்டைல் காராமணி மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம்
சுவையான... தக்காளி தொக்கு
சப்பாத்திக்கு அற்புதமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும் தக்காளி தொக்கு செய்து சுவையுங்கள்.
உங்கள் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? வெறும் வெங்காயம் மற்றும் தக்காளி மட்டும் தான் உள்ளதா? ஆனால் சப்பாத்திக்கு அற்புதமான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் சப்பாத்திக்கு பொருத்தமாக இருக்கும் தக்காளி தொக்கு செய்து சுவையுங்கள். இந்த தக்காளி தொக்கு செய்வது மிகவும் சுலபம் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.

முக்கியமாக இந்த தக்காளி தொக்கு சப்பாத்திக்கு மட்டுமின்றி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். இப்போது அந்த தக்காளி தொக்கு எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3-4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* வெங்காயம் - 3
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயத்தைப் போட்டு ஒருமுறை வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து, சிறிது உப்பு தூவி, நன்கு வெங்காயம் வதங்கும் வரை வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மஞ்சள் தூள், கரம் மசாலா, மல்லித் தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒருமுறை நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி, வேண்டுமானால் சிறிது நீர் தெளித்து ஒருமுறை கிளறி விட்டு, 15 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கி, தொக்கில் இருந்து எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது, அடுப்பை அணைத்துவிட்டு, மேலே சிறிது கறிவேப்பிலையைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான தக்காளி தொக்கு தயார்.



Click it and Unblock the Notifications