Latest Updates
-
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
தக்காளியும், பன்னீரையும் வெச்சு 15 நிமிடத்தில் இப்படியொரு சைடு டிஷ் செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்...
Tomato Paneer Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு 15 நிமிடத்தில் ஒரு டக்கரான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அதுவும் ஹோட்டலில் கொடுக்கப்படும் சைடு டிஷ் போன்று ஏதாவது செய்ய நினைகிறீர்களா? உங்கள் வீட்டில் தக்காளியும், பன்னீரும் உள்ளதா?
அப்படியானால் அந்த இரண்டையும் கொண்டு ஒரு அட்டகாசமான சைடு டிஷ் செய்யுங்கள். இந்த தக்காளி பன்னீர் சைடு டிஷ் 15 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு ஈஸியாக இருக்கும். ஏனெனில் இதற்கு அரைக்கும் போதே அனைத்து பொருட்களையும் சேர்த்துவிட வேண்டும். இதனால் இந்த டிஷ்ஷை வேகமாக செய்து விடலாம்.

உங்களுக்கு தக்காளி பன்னீர் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி பன்னீர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* தக்காளி - 3
* பூண்டு - 4 பல்
* இஞ்சி - 1 துண்டு
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பன்னீர் - 200 கிராம்
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பன்னீரை துருவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் தக்காளி, பூண்டு மற்றும் இஞ்சியை துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் நறுக்கிய தக்காளி, பூண்டு பற்கள், இஞ்சி,
மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்கு பச்சை
வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* தக்காளியில் இருந்து பச்சை வாசனை போன பின், துருவி வைத்துள்ள
பன்னீரை சேர்த்து, அத்துடன் கசூரி மெத்தி மற்றும் 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெயை சேர்த்து கிளறி, 5 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான
தக்காளி பன்னீர் தயார்.



Click it and Unblock the Notifications