Latest Updates
-
August 2026 Numerology: உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
காரசாரமான பன்னீர் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
தலைமுடி வறண்டு பிரஷ் மாதிரி இருக்கா? அப்ப இந்த வாழைப்பழ ஹேர் மாஸ்க்கை போடுங்க.. -
ஆகஸ்ட் மாதம் நிகழும் ஆண்டின் 2-வது சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
வெண்டைக்காயை இப்படி கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு தாறுமாறா இருக்கும்.. -
தினமும் ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் டாக்டர்! -
சிம்ம ராசியில் இருக்கும் கேதுவால் டிசம்பர் மாதத்திற்குள் இந்த 4 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்காம்.. -
ரவா அடையும், ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 31 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் மாதத்தில் உதயமாகும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு கடன் தொல்லை நீங்கி பண வரவு அதிகரிக்கும்!
தக்காளி கார சட்னி
பொதுவாக கார சட்னி செய்ய வேண்டுமானால், தக்காளி, வெங்காயம் அவசியம் தேவை. ஆனால் உங்கள் வீட்டில் தக்காளி உண்டு, வெங்காயம் இல்லையா? அப்படியானால் தக்காளி, பூண்டு, வரமிளகாய் கொண்டே சுவையான கார சட்னி செய்யலாம்.
இன்று உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்யப் போகிறீர்களா? அதற்கு சற்று புளிப்பாக மற்றும் காரமாக ஒரு சட்னியை சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? பொதுவாக கார சட்னி செய்ய வேண்டுமானால், தக்காளி, வெங்காயம் அவசியம் தேவை. ஆனால் உங்கள் வீட்டில் தக்காளி உண்டு, வெங்காயம் இல்லையா? அப்படியானால் தக்காளி, பூண்டு, வரமிளகாய் கொண்டே சுவையான கார சட்னி செய்யலாம். குறிப்பாக இந்த சட்னி பேச்சுலர்களும் செய்யும் வகையில் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு தக்காளி கார சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கார சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4-5
* பூண்டு - 10 பல்
* தக்காளி - 5 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* புளிச்சாறு - 1 டீஸ்பூன் அல்லது 1 சிறிய துண்டு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாயை சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* இப்போது அந்த எண்ணெயில் தக்காளி, புளி, சர்க்கரை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கி இறக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் தக்காளி, பூண்டு, வரமிளகாய் சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான தக்காளி கார சட்னி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
