Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு
4 தக்காளி இருந்தா போதும்.. கறிக்குழம்பு தோற்கும் அளவில் சைடு டிஷ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க..
Tomato Gravy Recipe In Tamil: அடிக்கடி வீட்டில் சப்பாத்தி, இட்லி, தோசை செய்வீர்களா? அதற்கு எப்போதும் ஒரே மாதிரி சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமாகவும், அதே சமயம் சிம்பிளாகவும் சைடு டிஷ் செய்ய வேண்டுமா? வீட்டில் தக்காளி இருந்தால் போதும். அதைக் கொண்டு அற்புதமான சுவையில் கிரேவி செய்யலாம். அதுவும் இந்த கிரேவியானது கறிக்குழம்பு தோற்கும் அளவில் சுவையாக இருக்கும்.
உங்களுக்கு தக்காளி கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* வறுத்த வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* வெள்ளை எள்ளு - டீஸ்பூன்
* ஏலக்காய் - 2
* கிராம்பு - 4
* பட்டை - சிறிய துண்டு
* இஞ்சி - 1 துண்டு
* பூண்டு - 5-6
* மிளகு - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1-2
* தண்ணீர் - சிறிது
கிரேவிக்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* புதினா - 1 கைப்பிடி
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* தக்காளி - 300 கிராம் (பெரிய துண்டுகளாக வெட்டியது)
* தேங்காய் பால் - 1 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வேர்க்கடலை, எள்ளு, ஏலக்காய், கிராம்பு,
பட்டை, இஞ்சி, பூண்டு, மிளகு, சோம்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள்,
பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் தக்காளியை சற்று பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சீரகம், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், புதினா, கறிவேப்பிலை
சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு 2-3 நிமிடம்
பச்சை வாசனை போக கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து கிளறி, மூடி வைத்து 2 நிமிடம் வேக
வைக்க வேண்டும்.
* பின் தேங்காய் பாலை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து,
கொத்தமல்லியைத் தூவி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கினால்,
சுவையான தக்காளி கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications