Latest Updates
-
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம்
இட்லி, தோசைக்கு 15 நிமிடத்தில் இப்படி குருமா செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க கொஞ்சம் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க!
Tiffin Kurma Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு எப்போதும் சட்னி, சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? வீடே மணக்கும் அளவில் ஒரு அற்புதமான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் டிபன் குருமா செய்யுங்கள். இந்த டிபன் குருமா 15 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் மிகவும் ஈஸியாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு டிபன் குருமாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே டிபன் குருமா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 2 துண்டு
* கிராம்பு - 5
* அன்னாசிப்பூ - 1
* கல்பாசி - சிறிது
* பிரியாணி இலை - 2
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பூண்டு - 6 பல்
* இஞ்சி - 3 துண்டு
* பச்சை மிளகாய் - 5
* சோம்பு - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 8
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய்,
சோம்பு சேர்த்து, வெங்காயம் நன்கு வதங்கும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் துருவிய தேங்காய் மற்றும் முந்திரியை சேர்த்து 2 நிமிடம்
வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, கல்பாசி, பிரியாணி
இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் மஞ்சள் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து 2 நிமிடம்
வதக்கி, அரைத்த வெங்காய விழுதை சேர்த்து 2 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பின் தேவையான அளவு நீரை ஊற்றி, 10 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து
இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான டிபன் குருமா தயார்.
Image Courtesy: Gomathi's Kitchen



Click it and Unblock the Notifications











