Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
தாய் பேசில் சிக்கன்
விடுமுறை நாட்களில் வீட்டில் வித்தியாசமான ரெசிபிக்களை முயற்சிக்க விரும்புபவரா? அப்படியானால் இந்த வார இறுதியில் சிக்கனைக் கொண்டு ஒரு அற்புதமான தாய் பேசில் சிக்கன் செய்யுங்கள்.
விடுமுறை நாட்களில் வீட்டில் வித்தியாசமான ரெசிபிக்களை முயற்சிக்க விரும்புபவரா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கானது. ஏனெனில் இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் சிக்கனைக் கொண்டு எப்படி ஒரு அற்புதமான தாய் பேசில் சிக்கன் செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தாய் பேசில் சிக்கன் ஒரு அற்புதமான ஸ்டாட்டர். மேலும் மாலை வேளையிலும் இது ஒரு ஸ்நாக்ஸ் போன்று செய்து சாப்பிடலாம்.

உங்களுக்கு தாய் பேசில் சிக்கன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தாய் பேசில் சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 300 கிராம்
* முட்டை - 1
* சோள மாவு - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - சுவைக்கேற்ப
* துளசி இலைகள் - 5
* சிவப்பு மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* பச்சை குடைமிளகாய் - 1 (சற்று நீளமாக நறுக்கியது)
* எண்ணெய் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
சாஸ் தயாரிப்பதற்கு...
* சில்லி சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி கெட்சப் - 1 டீஸ்பூன்
* சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் சோள மாவு, உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
* பின்பு அத்துடன் சிக்கன் துண்டுகளை சேர்த்து, சிறிது நீர் தெளித்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* சிக்கனைப் பிரட்டிய முட்டை கலவை மிகவும் கெட்டியாகவும் இருக்கக்கூடாது, மிகவும் நீராகவும் இருக்கக்கூடாது, ஓரளவு பதத்தில் சிக்கனுக்கு நல்ல கோட்டிங் கொடுக்கும் வகையில் இருக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சாஸ் தயாரிக்கும் முறை..
* மிக்சர் ஜாரில், சிவப்பு மிளகாய், பூண்டு ஆகியவற்றைப் போட்டு நீர் சேர்க்காமல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் சாஸ் தயாரிப்பதற்கு கொடுத்துள்ள சில்லி சாஸ், சோயா சாஸ், சோள மாவு மற்றும் அரை கப் நீர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு சாஸ்பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் அரைத்து வைத்துள்ள மிளகாய் பூண்டு விழுதையும் சேர்த்து வதக்கி, பின் பச்சை மிளகாயை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் சாஸ் கலவையை ஊற்றி நன்க கிளறி விட வேண்டும். சாஸ் கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி, இறுதியாக துளசி இலைகளை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான தாய் பேசில் சிக்கன் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications
