Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
ரெஸ்டாரண்ட் ஸ்டைல்.. தந்தூரி ஆலு கிரேவி
உங்களுக்கு ரெஸ்டாரண்ட்டில் கொடுக்கப்படும் கிரேவிகள் மிகவும் பிடிக்குமா? அப்படியானால் உங்கள் வீட்டில் தந்தூரி ஆலு கிரேவி செய்யுங்கள். இது அட்டகாசமான சுவையுடன் இருப்பதோடு, சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் நன்றாக இருக்கும்.
இன்று இரவு உங்கள் வீட்டில் செய்யும் சப்பாத்தி, பூரிக்கு வித்தியாசமான சுவையுடைய சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அதுவும் உங்களுக்கு ரெஸ்டாரண்ட்டில் கொடுக்கப்படும் கிரேவிகள் மிகவும் பிடிக்குமா? அப்படியானால் இன்று உங்கள் வீட்டில் தந்தூரி ஆலு கிரேவி செய்யுங்கள். இது அட்டகாசமான சுவையுடன் இருப்பதோடு, சப்பாத்தி, நாண், ஜீரா ரைஸ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு ரெஸ்டாரண்ட் ஸ்டைல் தந்தூரி ஆலு கிரேவி எப்படி செய்வதென்று தெரியாதா? கீழே தந்தூரி ஆலு கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இந்த கிரேவி நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
MOST READ: கேரளா ஸ்டைல் வறுத்து அரைச்ச முட்டை குழம்பு
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் + தேவையான அளவு
* நெய் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* முந்திரி - 10
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
ஊற வைப்பதற்கு...
* பேபி உருளைக்கிழங்கு - 25
* தயிர் - 1 கப்
* தந்தூரி மசாலா பவுடர் - 1 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கடலை மாவு - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் பேபி உருளைக்கிழங்குகளை குக்கரில் போட்டு, தேவையான அளவு நீர் ஊற்றி, உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து உருளைக்கிழங்கு மென்மையாக வெந்துள்ளதா என்று சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.
* பின் உருளைக்கிழங்குகளின் தோலுரித்து, உருளைக்கிழங்குகள் பெரிதாக இருந்தால், அதை துண்டுகளாக்கிக் கொள்ளுங்கள்.
* பின்பு ஒரு பௌலில் தயிருடன், உப்பு மற்றும் மசாலா பொடிகளை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
* அதன் பின் வேக வைத்துள்ள உருளைக்கிழங்குகளைப் போட்டு நன்கு பிரட்டி, 30 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்குகளைப் போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
* பின் அதே வாணலியில் உள்ள எண்ணெயில் சீரகத்தைப் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளுங்கள்.
* அடுத்து எஞ்சியிருக்கும் உருளைக்கிழங்கு ஊற வைத்த தயிர் கலவையை சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வையுங்கள். உங்களுக்கு வேண்டுமானால் அத்துடன் சிறிது உப்பு மற்றும் மிளகாய் தூளை சேர்த்துக் கொள்ளலாம்.
* மறுபுறம் முந்திரியை சுடுநீரில் போட்டு பத்து நிமிடம் ஊற வைத்து அரைத்து, கிரேவியுடன் சேர்த்து 2 நிமிடம் நன்கு கொதிக்க வையுங்கள்.
* இப்போது வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்குகளை சேர்த்து சில நிமிடங்கள் நன்கு கொதிக்க வையுங்கள்.
* அடுத்து சில கறித்துண்டுகளை நெருப்பில் நன்கு சுட்டு, ஒரு சிறிய பௌலில் போட்டு, அந்த பௌலை கிரேவியின் நடுவே வைத்து, அந்த கறித்துண்டில் நெய் சேர்க்கும் போது புகைக்க ஆரம்பிக்கும். அப்போது உடனே வாணலியை மூடியால் 2 நிமிடம் மூடி வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து கிரேவியின் மேலே கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான தந்தூரி ஆலு கிரேவி தயார்.
குறிப்பு:
* இந்த கிரேவியை கறித்துண்டுகளைப் புகைக்காமலேயே சாப்பிடலாம். ஆனால் உங்களுக்கு ஹோட்டலில் கொடுப்பது போன்று சுவை இருக்காது.
* இந்த கிரேவிக்கு பேபி உருளைக்கிழங்குகளுக்கு பதிலாக சாதாரண உருளைக்கிழங்குகளையும் பயன்படுத்தலாம். அதற்கு அந்த உருளைக்கிழங்குகளை 3-4 விசில் விட்டு இறக்கி, துண்டுகளாக்கி பயன்படுத்த வேண்டும்.
* உங்களிடம் தந்தூரி மசாலா பவுடர் இல்லாவிட்டால், கரம் மசாலாவுடன் சிறிது உலர்ந்த வெந்தயக் கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications











