Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம்
மிக்ஸ்டு ஃபுரூட் ஜாம்
பொதுவாக ஜாம் பலவகைகளில் பயன்படுகிறது. அதிலும் அவசரமாக வெளியே செல்லும் போதோ அல்லது அலுவலகத்திற்கு செல்லும் போதோ, ஜாம் வீட்டில் இருந்தால், அப்போது பிரட் அல்லது சப்பாத்தியை செய்து கொண்டு, அத்துடன் ஜாம் தொட்டுக் கொண்டு சாப்பிடுவோம். இதுவரை அத்தகைய ஜாமை கடைகளில் தான் வாங்கி பயன்படுத்தியிருப்போம். ஆனால் அத்தகைய ஜாமை, வீட்டிலேயே ஒருசில விருப்பமான பழங்களை வைத்து எளிதில் செய்து, நீண்ட நாட்கள் சாப்பிடலாம்.
அதிலும் குழந்தைகளுக்கு ஜாம் என்றால் மிகவும் பிடிக்கும். மேலும் ஜாமில் பல வகைகள் உள்ளன. இப்போது அவற்றில் மிக்ஸ்டு ஃபுரூட் ஜாம் எப்படி எளிமையான முறையில் செய்வது என்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:
ஆப்பிள் - 5-6
பப்பாளி - 1
திராட்சை - 1 கிலோ
வாழைப்பழம் - 3
ஸ்ட்ராபெர்ரி - 8
அன்னாசி - 1 (சிறியது)
எலுமிச்சை சாறு - 1 1/2 டீஸ்பூன்
சிட்ரிக் ஆசிட் - 6-7 டீஸ்பூன்
சர்க்கரை - 1 கிலோ
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் அன்னாசி மற்றும் பப்பாளியின் தோலை சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் ஆப்பிளை தோல் சீவாமல் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய அன்னாசி, பப்பாளி மற்றும் ஆப்பிள் பழங்களைப் போட்டு, 5-10 நிமிடம் வேக வைத்து, இறக்க வேண்டும்.
பின்பு ஆப்பிளின் தோலை நீக்கிவிடவும். அடுத்து திராட்சையில் உள்ள விதைகளை நீக்கிவிட வேண்டும்.
பிறகு மிக்ஸி/பிளெண்டரில் திராட்சை, எலுமிச்சை சாறு, ஆப்பிள், பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம் மற்றும் அன்னாசி சேர்த்து நன்கு கூழ் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் அரைத்து வைத்துள்ள கூழ், சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, தீயை குறைவில் வைத்து, கெட்டியாக வரும் வரை கொதிக்க விட வேண்டும்.
அடுத்து அதில் சிட்ரிக் ஆசிட் சேர்த்து 1-2 நிமிடம் அடுப்பில் வைத்து, கெட்டியானதும் இறக்க வேண்டும்.
அப்போது கலவையானது நீர்மமாக இல்லாமல் கெட்டியாக இருந்தால், ஜாம் ரெடியாகிவிட்டது என்று அர்த்தம்.
பின்னர் அதனை ஒரு காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் ஊற்றி, அறைவெப்ப நிலையில் குளிர வைத்து, பின்பு அதனை குளிர்சாதன பெட்டியில் குளிர வைக்க வேண்டும்.
இப்போது சுவையான மிக்ஸ்டு ஃபுரூட் ஜாம் ரெடி!!! இதனை பிரட் அல்லது சப்பாத்தியுடன் வைத்து நீண்ட நாட்கள் சாப்பிடலாம்.



Click it and Unblock the Notifications