Latest Updates
-
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
காரமான... பெப்பர் மட்டன் வறுவல்
தற்போது பறவை காய்ச்சல் பரவிக் கொண்டிருப்பதால், பலருக்கும் சிக்கன் சாப்பிட அச்சமாக இருக்கலாம். அதற்காக நிறைய பேர் சிக்கனைத் தவிர்த்து மட்டனை வாங்குவார்கள். உங்களுக்கு இந்த வார விடுமுறையில் ஒரு அற்புதமான மற்றும் நல்ல காரசாரமான ஒரு மட்டன் ரெசிபியை செய்ய நினைத்தால், பெப்பர் மட்டன் வறுவலை செய்து சாப்பிடுங்கள். இது அனைவருமே விரும்பி சாப்பிடும் வகையில் மிகவும் ருசியாக இருக்கும்.

இப்போது பெப்பர் மட்டன் வறுவல் ரெசிபியை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தேங்காய் எண்ணெய் - 1/4 கப்
* பட்டை - 1 துண்டு
* சோம்பு - 1 டீஸ்பூன்
* ஏலக்காய் - 4
* கிராம்பு - 4
* பிரியாணி இலை - 1
* வெங்காயம் - 3 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4
* தக்காளி - 2 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* மட்டன் - 1 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 2 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 15
* கறிவேப்பிலை - ஒரு கையளவு
செய்முறை:
* முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, பட்டை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
* பின் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுது மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி விடவும்.
* பின்பு அதில் மட்டனைக் கழுவி போட்டு, சிறிது உப்பு சேர்த்து நன்கு பத்து நிமிடம் வதக்கவும்.
* அடுத்து தக்காளியைப் போட்டு ஒருமுறை கிளறி, மல்லித் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும் கரம் மசாலா சேர்த்து 5 நிமிடம் கிளறி, பச்சை மிளகாயைப் போட்டு, நீரை ஊற்றி, குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
* விசில் போனாலும், குக்கரைத் திறந்து, சின்ன வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைப் போட்டு, மீண்டும் அடுப்பில் வைத்து, பத்து நிமிடம் குறைவான தீயில் வேக வைக்கவும்.
* அதற்குள் மற்றொரு வாணலியில் மிளகு மற்றும் சோம்பு சேர்த்து வறுத்து, பொடி செய்து கொள்ளுங்கள்.
* சின்ன வெங்காயம் வெந்த பின், அரைத்து வைத்துள்ள மிளகு சோம்பு பொடியை மட்டனுடன் சேர்த்து தூவி கிளறி இறக்கினால், காரமான பெப்பர் மட்டன் வறுவல் தயார்.
IMAGE COURTESY: yummytummyaarthi



Click it and Unblock the Notifications