Just In
- 9 hrs ago
இந்த ராசிக்காரங்க பணத்தை நிர்வகிப்பத்தில் சுத்தமா பொறுப்பில்லாமல் இருப்பாங்களாம்...!
- 10 hrs ago
இந்த 5 ராசிக்காரங்கள காதலிக்கிறவங்க ரொம்ப பாவம்... ஏனா இவங்க சைக்கோத்தனமா காதலிப்பாங்களாம்...!
- 11 hrs ago
மாரடைப்பு ஏற்படாம தடுத்து உங்க இதயத்தை பாதுகாக்க இந்த எண்ணெய் உதவுமாம்..!
- 12 hrs ago
ஆந்திரா ஸ்டைல் க்ரீன் சில்லி சிக்கன் ரெசிபி
Don't Miss
- News
காங்கிரசுக்கு 25 தொகுதிகள்?...திமுக-காங். இடையே சுமுக உடன்பாடு...இன்று காலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- Automobiles
மெர்சலாக்கும் தோற்றத்தில் ஷோரூமை வந்தடைந்தது கவாஸாகி நிஞ்சா 300!! மொத்தம் 3 நிறங்கள்... உங்களது தேர்வு எது?
- Movies
பிரபலங்களின் பாராட்டு மழையில் அன்பிற்கினியாள்.. ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் சக்கைபோடு போடுகிறது!
- Sports
அறிமுக தொடரிலேயே அசத்தல் ஆட்டம்...30 வருஷமா யாருமே செய்யலயாம்..வரலாற்று சாதனை படைத்த அக்ஷர் பட்டேல்
- Finance
டிவிஎஸ் மோட்டார்-இன் சூப்பர் அறிவிப்பு.. ஊழியர்கள் மகிழ்ச்சி..!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் மபொதுத்துறை நிறுவன வேலை!!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
சிக்கன் கொண்டு உலகின் ஒவ்வொரு பகுதியிலும் பல வெரைட்டியான ரெசிபிக்கள் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் சிக்கன் மெஜஸ்டிக் ஹைதராபாத்தில் இருந்து வந்த மிகவும் பிரபலமான சிக்கன் ரெசிபி. இதில் சிக்கன் துண்டுகளானது நீள நீளமாக வெட்டப்பட்டு, மோரில் ஊற வைத்து, பல மசாலாக்கள் சேர்த்து செய்யப்படுகிறது. இந்த சிக்கன் ரெசிபி நாவூறும் வகையில் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
கீழே சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம் (நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்)
* சோள மாவு - 2 டேபிள் பூன்
* முட்டை - 1
* இஞ்சி பூண்டு விழுது - 1 டீபூன்
* பச்சை மிளகாய் - 4
* கறிவேப்பிலை - சிறிது
* சோயா சாஸ் - 1/2 டீபூன்
* மல்லித் தூள் - 1 டீபூன்
* மிளகாய் தூள் - 1 1/2 டீபூன்
* சீரகப் பொடி - 1/2 டீபூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீபூன்
* தயிர் - 3 டேபிள் பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - சிறிது
* பூண்டு - 3-4 (நறுக்கியது)
* மோர் - 6 டேபிள் பூன்
செய்முறை:
* முதலில் எலும்பில்லாத சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி நன்கு நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் மோர் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி 4-5 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 5 மணிநேரம் கழித்து, அதில் சோள மாவு, முட்டை, இஞ்சி பூண்டு விழுது, உப்பு மற்றும் 1 டீபூன் எண்ணெய் ஊற்றி பிரட்டி, மீண்டும் ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரட்டி வைத்துள்ள சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
* பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
* பின் புதினா, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகப் பொடி சேர்த்து ஒரு நிமிடம் நன்கு வதக்கவும்.
* அடுத்து அதில் தயிரை ஊற்றி நன்கு கிளறி விடவும். பின் சோயா சாஸ் மற்றும் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளைப் போட்டு, மசாலா சிக்கனுடன் நன்கு சேருமாறு நன்கு பிரட்டி விட்டு, கொத்தமல்லியை மேலே தூவி, சிறிது எலுமிச்சை சாற்றினையும் பிழிந்துவிட்டு இறக்கினால், காரசாரமான சிக்கன் மெஜஸ்டிக் தயார்.
Image Courtesy: yummyfoodrecipes