Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
சோயா மிளகு வறுவலை இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. மட்டன் வறுவலே தோத்துடும்..
Soya Milagu Varuval Recipe In Tamil: உங்கள் வீட்டில் மீல் மேக்கரை அடிக்கடி செய்வீர்களா? எப்போது மீல் மேக்கரை செய்தாலும் ஒரே சுவையில் தான் செய்வீர்களா? அப்படி செய்யும் போது, மீல்மேக்கரில் இருந்து ஒருவித வாசனை வருமா?
அப்படியானால் ஒருமுறை மீல் மேக்கர் கொண்டு மிளகு வறுவல் செய்யுங்கள். இந்த மிளகு வறுவலானது அப்படியே மட்டன் வறுவல் போன்று இருக்கும். இந்த சோயா மிளகு வறுவல் தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு சோயா மிளகு வறுவலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சோயா மிளகு வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* மீல்மேக்கர் - 50 கிராம்
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* தயிர் - 2 ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* வெங்காயம் - 1 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
வறுத்து பொடி செய்வதற்கு...
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* மிளகு - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பிரியாண இலை - 1
* கிராம்பு - 3
* பட்டை - சிறிய துண்டு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 3 (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - 1/4 டம்ளர்
செய்முறை:
* முதலில் மீல் மேக்கரை கொதிக்கும் சுடுநீரில் போட்டு 2 நிமிடம் ஊற
வைத்து, பின் நீரை வடிகட்டிவிட்டு, சுத்தமான நீரில் 1 முறை
அலசிவிட்டு, அதிகப்படியான நீரை கைகளால் பிழிந்துவிட்டு, ஒரு
கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம்
மசாலா, தயிர், பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு
பேஸ்ட் சேர்த்து நன்கு கைகளால் பிரட்டி, மூடி வைத்து சிறிது நேரம் ஊற
வைக்க வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சோம்பு, சீரகம், மிளகு,
வரமிளகாய், பிரியாணி இலை,கிராம்பு, பட்டை ஆகியவற்றை சேர்த்து நல்ல
மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு
பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நீளவாக்கில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அத்துடன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் செய்து நன்கு பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்துள்ள மீல் மேக்கரை சேர்த்து நன்கு 2-3 நிமிடம்
கிளறி விட வேண்டும்.
* அதன் பின் மீல் மேக்கரில் 1/4 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து
பச்சை வாசனை போக 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக மூடியைத் திறந்து, அதில் அரைத்து வைத்துள்ள பொடியை
சேர்த்து, நன்கு கிளறி, சுருண்டு வரும் வரை பிரட்டி இறக்கினால்,
சுவையான சோயா மிளகு வறுவல் தயார்.



Click it and Unblock the Notifications











