Latest Updates
-
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும்
ஓம பொடி
ஸ்நாக்ஸ்களில் ஓம பொடி பலருக்கும் பிடித்த ஒன்று. அதை நீங்கள் நினைத்த நேரங்களில் எல்லாம் சாப்பிட ஆசைப்பட்டால், வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். மேலும் ஓம பொடி காரம் இல்லாததால், குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு ஓம பொடி எப்படி செய்வதென்று தெரியாதா?
அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு ஓம பொடியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
ஓமம் - 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
சூடான எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கையளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, வெண்ணெய், சூடான எண்ணெய், பெருங்காயத் தூள் சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும்.
பின்னர் ஓமத்தை மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை வடிகட்டி, பிசைந்து வைத்துள்ள மாவில் சேர்த்து மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
பிறகு சிறு துளையுள்ள முறுக்கு உழக்கில், சிறிது வைத்துக் கொள்ளவும். பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
எண்ணெய் சூடானதும், முறுக்கு உழக்கை மூடி எண்ணெயில் நேரடியாக பிழிய வேண்டும். பின்பு பொன்னிறமாக பொரித்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். இதுப்போன்று அனைத்து மாவையும் பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியில் கறிவேப்பிலையை அந்த எண்ணெயில் போட்டு பொரித்து, ஓம பொடியுடன் சேர்த்து, கையால் உதிர்த்துவிட்டால், ஓம பொடி ரெடி!!!
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
