Latest Updates
-
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம்
மசாலா பால்
மசாலா பால் உடலுக்கு நல்லது. இதற்கு இதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் தான் காரணம். இதுவரை நீங்கள் மசாலா பாலை கடைகளில் தான் குடித்திருப்பீர்கள். ஆனால் அந்த மசாலா பாலை வீட்டிலேயே எளிமையான முறையில் செய்து குடிக்கலாம்.
சரி, இப்போது மசாலா பாலை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பால் - 2 கப்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
பனங்கற்கண்டு - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - 1/2 இன்ச்
ஏலக்காய் - 1 (தட்டிக் கொள்ளவும்)
பாதாம் - 4
பிஸ்தா - 6
குங்குமப்பூ - சிறிது
செய்முறை:
முதலில் பாதாம் மற்றும் பிஸ்தாவை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, தோலுரித்து பொடியாக நறுக்கி அல்லது அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின் 1 டீஸ்பூன் பாலில் குங்குமப்பூவை சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி, அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
பின் சிறிது நேரம் கழித்து அதில் உள்ள பட்டை, கிராம்பு, ஏலக்காயை எடுத்துவிட வேண்டும்.
பின்பு அதில் குங்குமப்பூ பால், மிளகுத் தூள், சர்க்கரை, பனங்கற்கண்டு, நட்ஸ் ஆகியவற்றை சேர்த்து 3 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி பரிமாறினால், சுவையான மசாலா பால் ரெடி!!!



Click it and Unblock the Notifications
