Latest Updates
-
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
மாம்பழ தேங்காய் பால் ஸ்மூத்தி
எப்போதும் ஒரே மாதிரி ஸ்மூத்தி செய்து சுவைத்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் இன்று மாலை சற்று வித்தியாசமாக மாம்பழத்துடன், தேங்காய் பால் சேர்த்து ஸ்மூத்தி செய்து சுவையுங்கள். இது உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுக்கும். மேலும் உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட.
இங்கு மாம்பழ தேங்காய் பால் ஸ்மூத்தியை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மாம்பழம் - 1
தேங்காய் பால் - 1/2 கப்
குளிர்ந்த பால் - 1/4 கப்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
தேன் - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
பாதாம் - 4
உலர் திராட்சை - 4
செய்முறை:
முதலில் மாம்பழத்தின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் மாம்பழம், தேங்காய் பால், குளிர்ந்த பால், தயிர், தேன், சர்க்கரை, பாதாம், உலர் திராட்சை ஆகிய அனைத்தையும் ஒன்றாக போட்டு, நன்கு மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் அதனை டம்ளரில் ஊற்றிப் பரிமாறினால், சுவையான மாம்பழ தேங்காய் பால் ஸ்மூத்தி ரெடி!!!



Click it and Unblock the Notifications
