Latest Updates
-
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும்
ஜவ்வரிசி வடை: கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல்
கிருஷ்ண ஜெயந்தி நெருங்கிக் கொண்டிருக்கிறது. அனைவரது வீட்டிலும் பலகாரங்களை செய்ய ஆரம்பித்திருப்பீர்கள். இந்த வருடம் கிருஷ்ண ஜெயந்திக்கு வித்தியாசமான ரெசிபியை செய்ய நினைத்தால், ஜவ்வரிசி வடை செய்யுங்கள். இது செய்வது மிகவும் சிம்பிள் மற்றும் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
சரி, இப்போது அந்த ஜவ்வரிசி வடையை எப்படி எளிமையான முறையில் செய்வதென்று பார்ப்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஜவ்வரிசி - 3/4 கப்
உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து, துண்டுகளாக்கப்பட்டது)
வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
அரிசி மாவு - 1 டேபிள் ஸ்பூன் (விருப்பமிருந்தால்)
செய்முறை:
முதலில் ஒரு பௌலில் ஜவ்வரிசியை எடுத்து, அதில் தண்ணீர் ஊற்றி, 3-4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின் வறுத்த வேர்க்கடலையை மிக்ஸியில் போட்டு பொடித்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த ஜவ்வரிசியைப் போட்டு, அத்துடன் உருளைக்கிழங்கை மசித்து சேர்த்து, நறுக்கிய பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை கலவையில் நீர் அதிகம் இருந்தால், அத்துடன் அரிசி மாவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ளதை சிறு உருண்டைகளாக எடுத்து வடைப் போன்று தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
