Latest Updates
-
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல
சின்ன வெங்காய தொக்கு
உங்களுக்கு இட்லி, தோசைக்கு வித்தியாசமான, அதே சமயம் ஈஸியான ஒரு சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அப்படியானால் ஒரு சுவையான மற்றும் எளிமையான சைடு டிஷ் செய்யலாம். அது தான் சின்ன வெங்காய தொக்கு.
உங்களுக்கு இட்லி, தோசைக்கு வித்தியாசமான, அதே சமயம் ஈஸியான ஒரு சைடு டிஷ் செய்ய வேண்டுமா? உங்கள் வீட்டில் சின்ன வெங்காயம் உள்ளதா? அப்படியானால் ஒரு சுவையான மற்றும் எளிமையான சைடு டிஷ் செய்யலாம். அது தான் சின்ன வெங்காய தொக்கு. இந்த தொக்கு இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் நன்றாக இருக்கும். இந்த ரெசிபியின் ஸ்பெஷலே அதில் சேர்க்கப்படும் நல்லெண்ணெய் தான்.

முக்கியமாக இந்த தொக்கு 3 நாட்கள் வரை வைத்து சாப்பிட ஏற்றதாக இருக்கும். உங்கள் வீட்டில் ஃப்ரிட்ஜ் இருந்தால், 10 நாட்கள் வரை கூட வைத்து சாப்பிடலாம். இப்போது சின்ன வெங்காய தொக்கு ரெசிபியை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சின்ன வெங்காயம் - 1 கப்
* பூண்டு - 2 பல்
* புளி - 1/2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 6
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் மிக்ஸி ஜாரில் சின்ன வெங்காயம், பூண்டு, புளி, வர மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது நீர் ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக குறைவான தீயில் குறைந்தது 10 நிமிடம், கெட்டியாகி நிறம் மாறும் வரை நன்கு கிளறி விட வேண்டும்.
* எப்போது அரைத்த வெங்காய பேஸ்ட்டின் நிறம் மாறுகிறதோ, அப்போது அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
* பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, வெங்காயத் தொக்கில் சேர்த்து கிளறினால், சுவையான சின்ன வெங்காயத் தொக்கு தயார்.
குறிப்பு: இந்த வெங்காயத் தொக்கு 3 நாட்கள் வரை அறைவெப்பநிலையிலும், 10 நாட்கள் வரை ஃப்ரிட்ஜிலும் நன்றாக இருக்கும்.



Click it and Unblock the Notifications
