Latest Updates
-
சத்தான ரவா கீரை அடை - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்!
சிந்தி ஸ்டைல் சிக்கன் கிரேவி
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சிக்கனைக் கொண்டு ஒரு வித்தியாசமான, அதே சமயம் சுவையான ஒரு சைடு டிஷ் கிரேவி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் சிந்தி ஸ்டைல் சிக்கன் கிரேவி செய்யுங்கள்.
உங்கள் வீட்டில் உள்ளோர் இன்று இரவு சிக்கன் சமைக்க சொல்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு சிக்கனைக் கொண்டு ஒரு வித்தியாசமான, அதே சமயம் சுவையான ஒரு சைடு டிஷ் கிரேவி செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் சிந்தி ஸ்டைல் சிக்கன் கிரேவி செய்யுங்கள். இந்த சிக்கன் கிரேவி சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்திக்கும் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு சிந்தி ஸ்டைல் சிக்கன் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே சிந்தி ஸ்டைல் சிக்கன் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 500 கிராம்
* கருப்பு ஏலக்காய் - 1
* பிரியாணி இலை - 1
* பட்டை - 1 இன்ச்
* ஏலக்காய் - 3
* கிராம்பு - 2
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 6 பல் (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* தயிர் - 1/2 கப்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் சிக்கனை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து ஒருமுறை கிளறி, பின் மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு தக்காளி வேகும் வரை வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு மென்மையாக வெந்ததும், கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் தயிர், சுவைக்கேற்ப உப்பு மற்றும் அரை கப் நீர் ஊற்றி நன்கு கிளறி, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால் சிந்தி ஸ்டைல் சிக்கன் கிரேவி தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications