Latest Updates
-
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா?
எள்ளு பன்னீர் மஞ்சூரியன்
உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு அட்டகாசமான ஒரு மஞ்சூரியனை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். இந்த பன்னீர் மஞ்சூரியன் சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
மாலை வேளையில் சற்று சூடாக, புளிப்பாக, காரமாக சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு அட்டகாசமான ஒரு மஞ்சூரியனை வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். இந்த பன்னீர் மஞ்சூரியன் சப்பாத்தி, நாண் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு எள்ளு பன்னீர் மஞ்சூரியன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எள்ளு பன்னீர் மஞ்சூரியன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 1 கப்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 1 டேபிள் ஸ்பூன் (துருவியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சிவப்பு வர மிளகாய் பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன் (4 காஷ்மீரி மிளகாய்/வர மிளகாயை வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம் ஊற வைத்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளவும்)
* தக்காளி சாஸ் - 1/2 கப்
* சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* வெள்ளை எள்ளு - 2 டேபிள் ஸ்பூன் (வறுத்தது)
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/4 கப்
செய்முறை:
* முதலில் பன்னீரை சதுர துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் பன்னீர் துண்டுகளை எடுத்து, அத்துடன் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து பிரட்டி, வாணலியில் போட்டு பொன்னிறமாக வதக்கி இறக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, பின் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பிறகு மிளகாய் பேஸ்ட், தக்காளி சாஸ், சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறி, 2 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி, பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.
* பின்னர் பன்னீர் துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் வேக வைத்து, பின் அதன் மேல் எள்ளு விதைகளைத் தூவி இறக்கினால், சுவையான எள்ளு பன்னீர் மஞ்சூரியன் தயார்.
Image Courtesy: southindianfoods



Click it and Unblock the Notifications
