Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
சேப்பங்கிழங்கை இப்படி செஞ்சா.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. ட்ரை பண்ணி பாருங்க..
Seppakizhangu Roast: நீங்கள் அடிக்கடி உங்கள் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கை தான் சமைத்து கொடுப்பீர்களா? உங்கள் குழந்தைகள் உருளைக்கிழங்கை தவிர வேறு எந்த கிழங்கையும் சாப்பிடமாட்டார்களா? அப்படியானால் மிகவும் சத்தான சேப்பங்கிழங்கைக் கொண்டு ரோஸ்ட் செய்து கொடுங்கள்.
இந்த சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்வது மிகவும் சுலபம் மற்றும் இது குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். அதோடு இது சாம்பார் சாதம், ரசம், சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு சேப்பங்கிழங்கு ரோஸ்ட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சேப்பங்கிழங்கு ரோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சேப்பங்கிழங்கு - 500 கிராம்
* கடலை மாவு - 2 டீஸ்பூன்
* அரிசி மாவு - 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் சேப்பங்கிழங்கை குக்கரில் போட்டு, அது மூழுகும் அளவில்
நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து 1 விசில் விட்டு இறக்கிக்
கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, அதன் தோலை நீக்கிவிட்டு,
ஒவ்வொன்றையும் வட்டத் துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள்,
மல்லித் தூள், மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்துள்ள சேப்பங்கிழங்கை சேர்த்து பிரட்டி, 20
நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள சேப்பங்கிழங்கை சேர்த்து கிளற
வேண்டும்.
* அதுவும் குறைவான தீயில் வைத்து, சேப்பங்கிழங்கு நன்கு ரோஸ்ட்டாகும்
வரை வறுத்து எடுத்தால், சுவையான சேப்பங்கிழங்கு ரோஸ்ட் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications
