Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்!
தக்காளி பூண்டு சட்னி
இட்லி தோசைக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் மிகவும் எளிமையான தக்காளி பூண்டு சட்னி செய்யுங்கள்.
இன்று இரவு தோசை அல்லது இட்லி செய்ய நினைக்கிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் மிகவும் எளிமையான தக்காளி பூண்டு சட்னி செய்யுங்கள். இந்த சட்னி செய்வதற்கு தக்காளி, பூண்டு, புளி இருந்தால் போதுமானது. உங்களுக்கு தக்காளி பூண்டு சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

கீழே தக்காளி பூண்டு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய தக்காளி - 4
* பூண்டு - 10 பற்கள்
* வரமிளகாய் - 6
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* புளி - சிறிது (ஊற வைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியில் தக்காளியைப் போட்டு, அத்துடன் பூண்டு மற்றும் எண்ணெய் ஊற்றி நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாயை சேர்த்து மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
* பின்பு அதில் புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, உருளைக்கிழங்கை மசிக்கும் கரண்டியால் நன்கு மசித்து விட்டு பரிமாறினால், சுவையான தக்காளி பூண்டு சட்னி தயார்.
குறிப்பு:
* இந்த சட்னிக்கு தக்காளியை நேரடியாக நெருப்பில் ஓரளவு கருமையாக வாட்டி, பின் பயன்படுத்தினால், சுவை வித்தியாசமாக இருக்கும்.
* வேண்டுமானால், இதில் ஒரு வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளலாம்.
* சட்னி மென்மையாக வேண்டுமென நினைப்பவர்கள், மிக்சர் ஜாரில் அரைத்துக் கொள்ளலாம்.
* முக்கியமாக இந்த சட்னியை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால், ஒரு வாரம் வரை நன்றாக இருக்கும்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications