Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
வாழைக்காய் இருந்தா.. இப்படி கோலா உருண்டை செய்யுங்க.. மொறுமொறுன்னு டக்கரா இருக்கும்..
Vazhakkai Kola Urundai Recipe In Tamil: உங்கள் வீட்டில் வாழைக்காய் உள்ளதா? அந்த வாழைக்காயை பெரும்பாலும் வறுவல், பொரியல், பஜ்ஜி என்று தான் செய்து சாப்பிடுவீர்களா? அப்படியானால் ஒருமுறை கோலா உருண்டை செய்து சாப்பிடுங்கள். இப்படி வாழைக்காயை கோலா உருண்டையாக செய்து சாப்பிடும் போது, மிகவும் சுவையாக இருக்கும். மேலும் வாழைக்காய் விரும்பி சாப்பிடாதவர்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு வாழைக்காய் கோலா உருண்டையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வாழைக்காய் கோலா உருண்டை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* வாழைக்காய் - 3
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சிறிது
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 1 1/4 டீஸ்பூன்
* வெங்காயம் - 1
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 6 பல்
* புதினா - சிறிது
* வரமிளகாய் - 4
* பச்சை மிளகாய் - 2
* சோம்பு - 1 டீஸ்பூன்
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* பொட்டுக்கடலை - 3/4 கப்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் வாழைக்காயின் இருமுனைகளையும் வெட்டி நீக்கி விட்டு,
குக்கரில் போட்டு, காய் மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, சிறிது உப்பு
சேர்த்து, குக்கரை அடுப்பில் வைத்து, 1 விசில் விட்டு இறக்க
வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, வாழைக்காயை ஒரு தட்டில் எடுத்து
வைத்து, குளிர வைக்க வேண்டும்.
* பின் அதன் தோலை நீக்கிவிட்டு, கைகளால் வாழைக்காயை கட்டிகளின்றி
பிசைந்து விட வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, புதினா
ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய் மற்றும் வரமிளகாயை சேர்த்து, அத்துடன்
சோம்பு சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் துருவிய தேங்காய், பொட்டுக்கடலை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் கரம் மசாலாவை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி 2
நிமிடம் வதக்கி இறக்கி, ஒரு தட்டில் போட்டு நன்கு குளிர வைக்க
வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, நீர்
சேர்க்காமல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அரைத்ததை வாழைக்காயுடன் சேர்த்து கைகளால் நன்கு பிசைய
வேண்டும்.
* ஒருவேளை கலவை சற்று பிசுபிசுவென்று கைகளில் ஒட்டினால், அதில் 2
ஸ்பூன் பொட்டுக்கடலை மாவை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள
வேண்டும்.
* பின்பு பிசைந்த கலவையை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருண்டைகளாக
உருட்டி, தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருண்டைகளை சேர்த்து மிதமான தீயில்
வைத்து பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான வாழைக்காய் கோலா
உருண்டை தயார்.



Click it and Unblock the Notifications
