Latest Updates
-
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட்-ல் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது.. -
ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 17 லட்சத்திற்கு விற்கப்படும் உலகின் ஆடம்பர ரயில் - எந்த நாட்டில் ஓடுது தெரியுமா? -
பருப்பு குழம்பு - சிம்பிளா 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்சக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உங்களுக்கு மாரடைப்பு வருமான்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இந்த 5 இரத்த பரிசோதனைகளை செய்யுங்க.. -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் ஆகஸ்ட் மாதத்தில் அற்புத பலன்களை பெறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சனி பகவான் வக்ரமடைவதால் இன்று முதல் எந்த ராசிக்கு சூப்பராகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
காஞ்சிபுர கோவில் இட்லியும், அதுக்கேற்ற இட்லி பொடியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
இன்றைய ராசிபலன் 27 ஜூலை 2026: இன்று இந்த 5 ராசிகளுக்கு கனவுகள் பலிக்கும் நாளாக இருக்குமாம்
1 கப் ரவா இருந்தா போதும்.. பஞ்சு போல மிருதுவான குலாப் ஜாமூன் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க...
Rava Jamun Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோருக்கு குலாப் ஜாமூன் என்றால் பிடிக்குமா? அடிக்கடி வந்து குலாப் ஜாமூன் செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் 1 கப் ரவை இருக்கா?
அப்படியானால் அந்த ரவையைக் கொண்டு ஜாமூன் செய்யுங்கள். இந்த ரவா குலாப் ஜாமூன் வழக்கமான குலாப் ஜாமூனைப் போன்றே நன்கு பஞ்சு போன்று மிருதுவாக இருக்கும். முக்கியமாக இந்த ஜாமூன் செய்வதற்கு மிகவும் சுலபமாகவும், சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு ரவா குலாப் ஜாமூனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா குலாப் ஜாமூன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சர்க்கரை - 2 கப்
* தண்ணீர் - 3 கப்
* ஏலக்காய் பொடி . சிறிது
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
ஜாமூனிற்கு...
* ரவை - 1 கப்
* நெய் - 1 டீஸ்பூன்
* பால் - 3 கப்
* சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து, நீரை ஊற்றி
அடுப்பில் வைத்து, சர்க்கரையை கரைய வைக்க வேண்டும்.
* சர்க்கரை நன்கு கரைந்ததும், அதில் ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து,
கம்பி பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப் ரவையை சேர்த்து,
2-3 நிமிடம் மிதமான தீயில் வைத்து வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி நன்கு கலந்து, 2 நிமிடம்
வறுத்து இறக்கி, குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு ஒருமுறை
அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் அரைத்த ரவா பொடியை சேர்த்து, அதில் 3 கப் பாலை
ஊற்றி நன்கு கட்டிகளின்றி கலந்து விட வேண்டும்.
* பின் அதில் சர்க்கரையை சேர்த்து மிதமான தீயில் வைத்து கிளறி, மூடி
வைத்து 3-4 நிமிடம் வேக வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* மாவானது நன்கு குளிர்ந்ததும், உள்ளங்கையால் நன்கு பிசைந்து, கொஞ்சம்
கொஞ்சமாக எடுத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு தட்டில் எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உருட்டிய உருண்டைகளை போட்டு மிதமான
தீயில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுத்து, சூடான சர்க்கரை பாகுவுடன்
சேர்க்க வேண்டும். ஒருவேளை சர்க்கரை பாகு ஆறியிருந்தால், சூடேற்றிக்
கொண்டு, பின் உருண்டைகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இதேப் போன்று
அனைத்து உருண்டைகளையும் பொரித்து சர்க்கரை பாகுவுடன் சேர்த்து கிளறி,
மூடி வைத்து 5 மணிநேரம் ஊற வைத்து, பின் பரிமாறினால், மிருதுவான ரவா
ஜாமூன் தயார்.
Image Courtesy: Today's Samayal



Click it and Unblock the Notifications