Latest Updates
-
நவம்பர் 14, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் -
கேது கடக ராசிக்குள் செல்வதால் 18 மாதங்களுக்கு நரகத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2026 ராகு-கேது பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? -
4 முட்டையும், 1 கப் தயிரும் இருந்தா இந்த பஞ்சாபி மசாலாவை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு பக்காவா இருக்கும் -
தூங்க செல்வதற்கு முன் பாதத்தில் தேங்காய் எண்ணெயை தடவினால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
உங்கள் இரத்தப் பிரிவு உங்கள் குணங்களைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா? -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க செய்த சத்தியத்தை எப்போதும் காப்பாற்ற மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாகர்கோவில் கருப்பட்டி பணியாரம் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க... -
அதிக பனியால் சருமம் சொரசொரன்னு இருக்குதா? அப்ப இந்த ஸ்க்ரப்பை வாரம் 1 முறை யூஸ் பண்ணுங்க.. -
விடாப்பிடியான காபி மற்றும் டீ கறைகளை நீக்க உதவும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க - துணி புதுசு போல மாறிரும்
ரவா டோக்ளா
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு காபி, டீ குடிக்கும் போது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், ரவா டோக்ளா செய்து கொடுங்கள். இது ஒரு சிறப்பான மற்றும் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ்
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு காபி, டீ குடிக்கும் போது ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால், ரவா டோக்ளா செய்து கொடுங்கள். இது ஒரு சிறப்பான மற்றும் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ். வட இந்தியாவில் இது மிகவும் பிரபலமானது. மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது.

உங்களுக்கு ரவா டோக்ளா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ரவா டோக்ளாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரவை - 1 கப்
* கெட்டி தயிர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 2 டீஸ்பூன் (துருவியது)
* எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
* பேக்கிங் சோடா/சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* துருவிய தேங்காய் - சிறிது
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* எள்ளு விதைகள் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் பிளெண்டரில் ரவையைப் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெயை தடவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பௌலில் பொடித்த ரவை, தயிர், உப்பு, சர்க்கரை, இஞ்சி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை எடுத்து, நீர் சேர்த்து, பேக்கிங் சோடா சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பிறகு இதை எண்ணெய் தடவிய பாத்திரத்தில் போட்டு, இட்லி பாத்திரத்தில் வைத்து, 15 முதல் 20 நிமிடங்கள் வரை வேக வைத்து இறக்கி 5 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.
* பின் கத்தியால் அதை துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வேக வைத்துள்ள டோக்ளாவின் மேல் ஊற்றி, அதன் மேல் கொத்தமல்லி மற்றும் தேங்காயைத் தூவினால், சுவையான ரவா டோக்ளா தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
