Just In
- 3 hrs ago
உடல் எடையை குறைக்கும்போது இரவு உணவிற்கு முட்டை அல்லது கோழி எடுத்துக்கொள்வது நல்லதா?
- 4 hrs ago
புதினா சட்னி
- 4 hrs ago
திருமணமான ஆண்கள் தினமும் 'இத' ஒரு கையளவு சாப்பிடுவது ரொம்ப நல்லதாம்... இது ஆண்களின் பல பிரச்சனையை போக்குமாம்..
- 5 hrs ago
இரவு உணவை எத்தனை மணிக்குள் சாப்பிட வேண்டும்? விரைவாக சாப்பிடுவது உண்மையில் நல்லதா?
Don't Miss
- News
பேரறிவாளனை தூக்கில் போடனும்.. சட்டம் தெரியாத கே.டி.தாமஸ் நீதிபதியா? ஆவேசப்படும் அமெரிக்கை நாராயணன்
- Sports
ஜடேஜாவை முந்திய ரியான் பராக்.. விமர்சனங்களுக்கு மத்தியில் இப்படி ஒரு சாதனையா?? ரசிகர்கள் வியப்பு!
- Finance
பெங்களூர் நிறுவனத்தில் ஹேக்கர்கள் கைவரிசை.. ரூ.7.3 கோடி திருட்டு..!
- Movies
வருண் அக்ஷராவுக்கு திருமணமா ?... இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!
- Automobiles
ஆக்டிவாவை யாருமே அடிச்சிக்க முடியாது.. சமீபத்தில் சைலண்டா நடந்த சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்டீர்களா?
- Technology
விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் மோட்டோ ஜி42: சாதனம் இப்படியும் இருக்கலாம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ரம்ஜான் ஸ்பெஷல்: முகலாய் மட்டன் மசாலா
ரம்ஜான் பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ரம்ஜான் அன்று இஸ்லாமிய நண்பர்களின் வீடுகளில் மட்டன் சமைப்பார்கள். இந்த ரம்ஜான் பண்டிகை அன்று ஸ்பெஷலான மட்டன் ரெசிபியை செய்ய நினைத்தால், முகலாய் மட்டன் மசாலாவை செய்யுங்கள். இந்த மட்டன் மசாலா செய்வது மிகவும் சுலபம். மேலும் இந்த மட்டன் மசாலா வெள்ளை சாதம், பிரியாணி, சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
உங்களுக்கு முகலாய் மட்டன் மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முகலாய் மட்டன் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் - 1/2 கிலோ
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மசாலாவிற்கு...
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 3 (அரைத்தது)
* மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* சீரகப் பொடி - 2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* முந்திரி - 50 கிராம்
* கொத்தமல்லி - ஒரு கையளவு (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* நெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 சிறிய துண்டு
* ஏலக்காய் - 5
* கிராம்பு - 4
செய்முறை:
* முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் மட்டனை கழுவிப் போட்டு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, குக்கரை மூடி 5 விசில் விட்டு, தீயைக் குறைத்து 15 நிமிடம் மட்டனை வேக வைத்து, பின் அடுப்பை அணைத்துவிட வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறக்க வேண்டும்.
* பின் ஒரு பௌலில் முந்திரியைப் போட்டு, அதில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி 30 நிமிடம் ஊற வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பெரிய கடாயை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த தக்காளியை ஊற்றி, எண்ணெய் பிரியும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
* அடுத்து அதில் மசாலா பொடிகளை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் வேக வைத்துள்ள மட்டனை நீருடன் சேர்த்து, வேண்டுமானால் சிறிது நீரையும் ஊற்றி கிளறி, குறைவான தீயில் சில நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அரைத்த முந்திரியை சேர்த்து கிளறி, குறைவான தீயில் 15-20 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து, மேலே கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான முகலாய் மட்டன் மசாலா தயார்.
Image Courtesy: yummytummyaarthi