Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்!
இட்லி, தோசை, சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்... புடலங்காய் தொக்கு
Pudalangai Thokku Recipe: இதுவரை நீங்கள் புடலங்காயைக் கொண்டு கூட்டு, பொரியல் என்று தான் செய்திருப்பீர்கள். ஆனால் அந்த புடலங்காயைக் கொண்டு தொக்கு செய்திருக்கிறீர்களா? ஆம், புடலங்காய் கொண்டும் தொக்கு செய்யலாம். இந்த புடலங்காய் தொக்கு இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, சாதம் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
உங்கள் வீட்டில் உள்ளோர் புடலங்காயை விரும்பி சாப்பிடமாட்டார்கள் என்றால், அவர்களுக்கு புடலங்காய் தொக்கு செய்து கொடுங்கள். இது நிச்சயம் அவர்கள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும். முக்கியமாக இது குழந்தைகள் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.

உங்களுக்கு புடலங்காய் தொக்கு எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே புடலங்காய் தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புடலங்காய் - 1
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* வெந்தயம் - ஒரு சிட்டிகை
* சீரகம் - 1/4 ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* பூண்டு - 10 பல் (தட்டிக் கொள்ளவும்)
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (நீரில் ஊற வைத்து சாறு எடுத்துக்
கொள்ளவும்)
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் புடலங்காயின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள
வேண்டும்.
* பின் அதை மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரவென்று அரைத்து தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை
சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு பொன்னிறமாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் தட்டிய பூண்டு பற்களை சேர்த்து நன்கு பச்சை வாசனை போக
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள புடலங்காயை சேர்த்து நன்கு கிளறி
விட வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூளை சேர்த்து நன்கு
ஒருசேர கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து மூடி வைத்து, 10 நிமிடம்
குறைவான தீயில் வைத்து வேக வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் ஆனதும், மூடியைத் திறந்து, புடலங்காயை கிளறி விட
வேண்டும். பின் அதில் புளிச்சாற்றினை சேர்த்து கிளறி, உப்பு சுவை
பார்த்து மீண்டும் மூடி வைத்து 3-4 நிமிடம் வேக வைத்து மூடியைத்
திறந்தால், சுவையான புடலங்காய் தொக்கு தயார்.
Image Courtesy: sailajakitchen



Click it and Unblock the Notifications
