Latest Updates
-
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்
உருளைக்கிழங்கு சட்னி
இதுவரை எத்தனையோ சட்னியை உங்கள் வீட்டில் செய்திருப்பீர்கள். ஆனால் உருளைக்கிழங்கைக் கொண்டு சட்னி செய்திருக்கிறீர்களா? ஆம், உருளைக்கிழங்கைக் கொண்டும் சட்னியை செய்யலாம்.
இதுவரை எத்தனையோ சட்னியை உங்கள் வீட்டில் செய்திருப்பீர்கள். ஆனால் உருளைக்கிழங்கைக் கொண்டு சட்னி செய்திருக்கிறீர்களா? ஆம், உருளைக்கிழங்கைக் கொண்டும் சட்னியை செய்யலாம். இந்த உருளைக்கிழங்கு சட்னி சப்பாத்தி, இட்லி, தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். அதோடு உருளைக்கிழங்கு சட்னி செய்வதற்கும் சுலபமாக இருக்கும். வீட்டில் உள்ளோரும் விரும்பி சாப்பிடக்கூடிவாறு இருக்கும்.

உங்களுக்கு உருளைக்கிழங்கு சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பெரிய உருளைக்கிழங்கு - 1 (சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
அரைப்பதற்கு...
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பூண்டு - 4 பல்
* வரமிளகாய் - 2
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
* நல்லெண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் அரைப்பதற்கு கொடுத்துள்ள வெங்காயம், தக்காளி, வரமிளகாய், பூண்டு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய தக்காளி பேஸ்ட்டை சேர்த்து கிளறி, சில நிமிடங்கள் நன்க பச்சை வாசனை போக கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் உருளைக்கிழங்கை சேர்த்து, அரை கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து சில நிமிடங்கள் உருளைக்கிழங்கு மென்மையாகும் வரை வேக வைத்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
* இறுதியில் ஒரு சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் ஊற்றி கிளறினால், சுவையான உருளைக்கிழங்கு சட்னி தயார்.
குறிப்பு:
* உருளைக்கிழங்கு அளவுக்கு அதிமாக வேக வைத்துவிட வேண்டாம்.
* வேண்டுமானால், ஃப்ளேவருக்காக அத்துடன் 1/2 டீஸ்பூன் சாம்பார் தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
* நல்லெண்ணெய் பிடிக்காவிட்டால், சமையல் எண்ணெயையே பயன்படுத்திக் கொள்ளலாம்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications