Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடை இருமடங்கு வேகத்துல குறையும்! -
செப்டம்பர் 25, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சோதனையான நாளாக இருக்குமாம் -
அக்டோபர் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
சனிபகவான் மீன ராசியில் நேரடி இயக்கத்தைத் தொடங்குவதால் உச்சத்தைத் தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹோட்டல் பரோட்டா சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
1 கப் பாசிப்பருப்பு இருந்தா இந்த பெங்காலி ஸ்டைல் கிச்சடி ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமா, டேஸ்ட்டா இருக்கும் -
செப்டம்பர் 26-ல் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்! -
இந்த 4 ராசிக்காரங்க காதலில் அதிர்ஷ்டமே இல்லாதவர்களாம் - இவங்க எதிர்பார்க்கும் எதுவுமே நடக்காதாம் -
1 கப் பச்சை பயறு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இத பசங்களுக்கு செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
ஜப்பானில் 90 லட்சம் வீடுகளில் ஒருவர் கூட வசிக்காத வினோதம் - ஆடம்பர வீடுகள் 'பேய் வீடுகளாக' மாற காரணம் என்ன?
நாவூற வைக்கும்... பெப்பர் மட்டன் கிரேவி
பெப்பர் மட்டன் கிரேவி சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்தி, பூரிக்கும் அற்புதமாக இருக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமான சுவையில் இருக்கும்.
உங்களுக்கு மட்டன் பிடிக்குமா? மட்டனை வைத்து பலவிதமான ரெசிபிக்களை முயற்சித்துள்ளீர்களா? உங்களுக்கு பெப்பர் மட்டன் கிரேவி செய்யத் தெரியுமா? இந்த பெப்பர் மட்டன் கிரேவி சாதத்திற்கு மட்டுமின்றி, சப்பாத்தி, பூரிக்கும் அற்புதமாக இருக்கும். மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் அற்புதமான சுவையில் இருக்கும்.

உங்கள் வீட்டில் உள்ளவர்களை மட்டன் கொண்டு அற்புதமான சமையல் செய்து அசத்த நினைத்தால், பெப்பர் மட்டன் கிரேவி செய்யுங்கள். இது நிச்சயம் உங்களை பாராட்டு மழையில் நனைய வைக்கும். மேலும் இந்த கிரேவி செய்வதற்கு அவ்வளவாக சிரமப்பட தேவையில்லை. மிகவும் எளிமையாக வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே செய்யக்கூடியது என்பதால் எப்போது வேண்டுமானாலும் இதை செய்யலாம்.
MOST READ: ருசியான... சிக்கன் கெட்டி குழம்பு
இப்போது நாம் அந்த பெப்பர் மட்டன் கிரேவியை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து உங்கள் வீட்டில் முயற்சித்து எப்படி இருந்தது என்று உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் - 1/2 கிலோ
* வெங்காயம் - 2 (பெரியது, நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* ஏலக்காய் - 2
* சீரகம் - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* உப்பு - தேவையான அளவு
வறுத்து அரைப்பதற்கு...
* சோம்பு - 2 டீஸ்பூன்
* மிளகு - 2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மிளகு மற்றும் சோம்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் எண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு தக்காளியை சேர்த்து, அது மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* இப்போது வதக்கிய வெங்காயம் தக்காளி கலவையை பாதி எடுத்து மிக்ஸியில் போட்டு அரைத்து, மீண்டும் குக்கரில் ஊற்ற வேண்டும்.
* பின் அதில் உப்பு மற்றும் மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து கிளறி விட வேண்டும்.
* அடுத்ததாக மட்டனை சேர்த்து நன்கு கிளறி விட்டு, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு, குறைவான தீயில் 5 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைத்து குக்கரை இறக்கி விட வேண்டும்.
* குக்கரில் உள்ள விசில் போனதும் மூடியைத் திறந்து, தேவையான அளவு நீர் ஊற்றி மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியாக அதில் அரைத்து வைத்துள்ள மிளகு சோம்பு பொடியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான பெப்பர் மட்டன் கிரேவி தயார்...
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
