Latest Updates
-
15000 கோடி முகேஷ் அம்பானி வீட்டை விட பெரிய வீடு இந்தியாவிலுள்ள இந்த வீடுதானாம் - இந்த வீடு யாருடையது தெரியுமா? -
October Matha Rasipalan 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது! -
இந்த கஞ்சியை வாரத்துக்கு 3 முறை செஞ்சு குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
செப்டம்பர் 24, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க நினைச்சதெல்லாம் நடக்கபோகுதாம் - சந்தோஷமா இருங்க -
அக்டோபரில் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
புதன் துலாம் ராசிக்குள் நுழைவதால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க..
பீர்க்கங்காய் மசியல்
சாதத்திற்கு சற்று வித்தியாசமாக ஏதேனும் செய்து சுவைத்து விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் பீர்க்கங்காய் இருந்தால், அதைக் கொண்டு மசியல் செய்யுங்கள்.
உங்களுக்கு தினமும் சாம்பார், புளிக்குழம்பு என்று செய்து சுவைத்து அலுத்துப்போய் விட்டதா? சாதத்திற்கு சற்று வித்தியாசமாக ஏதேனும் செய்து சுவைத்து விரும்புகிறீர்களா? அப்படியானால் உங்கள் வீட்டில் பீர்க்கங்காய் இருந்தால், அதைக் கொண்டு மசியல் செய்யுங்கள். இந்த பீர்க்கங்காய் மசியல் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாகவும் இருக்கும்.

உங்களுக்கு பீர்க்கங்காய் மசியல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீர்க்கங்காய் மசியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: கேரளா ஸ்டைல் பச்சை பயறு தால்
தேவையான பொருட்கள்:
* பீர்க்கங்காய் - 2
* சின்ன வெங்காயம் - 10-12
* பச்சை மிளகாய் - 4-5 (நீளமாக கீறியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/8 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 3/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 1
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் பீர்க்கங்காயை நீரில் நன்கு கழுவி, தோலுரித்து விட்டு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து 2-3 நிமிடம் நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பீர்க்கங்காய் நன்கு குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அதைத் தொடர்ந்து தக்காளியை சேர்த்து உப்பு தூவி நன்க மென்மையாக வதக்க வேண்டும்.
* இந்நிலையில் மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறி, ஒரு கப் நீரை ஊற்றி, ஒருமுறை கொதிக்க வைக்க வேண்டும். ஒரு கொதி வந்ததும், அரைத்த பீர்க்கங்காயை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, குறைவான தீயில் 5-6 நிமிடம் கொதிக்க வைத்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், பீர்க்கங்காய் மசியல் தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications
