Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
பன்னீர் சீஸ் டோஸ்ட்
உங்கள் குழந்தைகள் பிரட் சாப்பிட கேட்கிறார்களா? அப்படியானால் அவர்களுக்கு வெறும் பிரட் கொடுப்பதற்கு பதிலாக, உங்கள் வீட்டில் சீஸ், பன்னீர் இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான டோஸ்ட் செய்து கொடுங்கள்.
உங்கள் வீட்டில் பிரட் உள்ளதா? உங்கள் குழந்தைகள் பிரட் சாப்பிட கேட்கிறார்களா? அப்படியானால் அவர்களுக்கு வெறும் பிரட் கொடுப்பதற்கு பதிலாக, உங்கள் வீட்டில் சீஸ், பன்னீர் இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான டோஸ்ட் செய்து கொடுங்கள். இந்த பன்னீர் சீஸ் டோஸ்ட் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். இந்த பன்னீர் சீஸ் டோஸ்ட் ஒரு சிறந்த ஸ்நாக்ஸாக இருப்பது மட்டுமின்றி, காலை வேளையில் சாப்பிட ஒரு சிம்பிளான காலை உணவாகவும் இருக்கும்.

உங்களுக்கு பன்னீர் சீஸ் டோஸ்ட் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் சீஸ் டோஸ்ட்டின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 1 கப் (துருவியது)
* சீஸ் - 1/4 கப் (துருவியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* மயோனைஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* இத்தாலியன் சீசனிங் - 1 டீஸ்பூன்
* உலர்ந்த கற்பூரவள்ளி இலை / ஆரிகனோ - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
* பிரட் துண்டுகள் - 2-4
* வெண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் சில்லி ப்ளேக்ஸ், பிரட் மற்றும் வெண்ணெயைத் தவிர அனைத்தையும் எடுத்து நன்கு கலந்த கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பிரட் துண்டை எடுத்து, அதன் மேல் வெண்ணெயைத் தடவி, பன்னீர் கலவையை மேலே சமமாக பரப்பி, அதன் மேல் சிறிது சீஸ் தூவ வேண்டும்.
* அதன்பின் மேலே சில்லி ப்ளேக்ஸ் தூவ வேண்டும்.
* பின்னர் ஒரு நாண்ஸ்டிக் பேனை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் அல்லது வெண்ணெயை தடவி, குறைவான தீயில் வைத்து பிரட் துண்டை வைக்க வேண்டும்.
* பிரட்டின் அடிப்பகுதி பொன்னிறமானதும், பிரட்டை திருப்பிப் போட்டு, சிறிது நேரம் வேக வைத்து எடுத்து இரண்டாக வெட்ட வேண்டும். இதேப் போல் அனைத்து பிரட் துண்டுகளையும் செய்தால், பன்னீர் சீஸ் டோஸ்ட் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
