Latest Updates
-
1/4 கப் கறிவேப்பிலை இருந்தா இந்த வித்தியாசமான மசாலா சாதம் செய்யுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
கல்யாண வீட்டு சேனைக்கிழங்கு வறுவல் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்த 5 நபர்களை அவமதிப்பது மிகப்பெரிய பாவமாம் - இவர்களுக்கு நரகம் உறுதியாம் - சாணக்கிய ரகசியம் -
Chronic Disease Awareness Day 2026: நாள்பட்ட நோய்களும்.. அவற்றின் அறிகுறிகளும்.. - விளக்கும் டாக்டர்! -
ஜூலை 16-ல் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது... -
1 சௌ சௌ காயும், 5 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஜூலை 16-ல் சனி-குரு உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக்கப் போகுதாம் -
ஜூலை 14-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
1/4 கப் கொள்ளு இருந்தா இந்த கர்நாடகா பேமஸ் சட்னியை ட்ரை பண்ணுங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும்
பன்னீர் புர்ஜி
இரவு சப்பாத்தி செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அதற்கு சிம்பிளாக ஒரு சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அப்படியானால் புரோட்டீன் நிறைந்த பன்னீரைக் கொண்டு ஒரு அற்புதமான பன்னீர் புர்ஜி செய்யுங்கள்.
இரவு சப்பாத்தி செய்யலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அதற்கு சிம்பிளாக ஒரு சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அப்படியானால் புரோட்டீன் நிறைந்த பன்னீரைக் கொண்டு ஒரு அற்புதமான பன்னீர் புர்ஜி செய்யுங்கள். இந்த பன்னீர் புர்ஜி செய்வது மிகவும் சுலபம். மேலும் இதை செய்வதற்கு பன்னீர் மற்றும் வீட்டில் உள்ள பொருட்களே போதுமானது. குறிப்பாக பன்னீர் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஓர் உணவுப் பொருள் என்பதால், பன்னீர் புர்ஜி செய்தால், ஒரு சப்பாத்தி சாப்பிடும் உங்கள் குழந்தை 2 சப்பாத்தியை வாங்கி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு பன்னீர் புர்ஜி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் புர்ஜி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 200 கிராம் (துருவியது)
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் பன்னீரை துருவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தைப் போட்டு தாளிக்க வேண்டும்.
* பின் அதில் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா சேர்த்து, வேண்டுமானால் சிறிது மல்லித் தூளையும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் துருவிய பன்னீரை சேர்த்து சிறிது நீரைத் தெளித்து கிளறி, ஒரு நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
* பின் மூடியைத் திறந்து, மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பன்னீர் புர்ஜி தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications