Latest Updates
-
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
பன்னீர் புர்ஜி மசாலா
இன்று இரவு ஸ்பெஷலாக என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு ஒரு சுவையான பன்னீர் புர்ஜி மசாலா செய்யலாம்.
இன்று இரவு ஸ்பெஷலாக என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? அப்படியானால் அந்த பன்னீரைக் கொண்டு ஒரு சுவையான பன்னீர் புர்ஜி மசாலா செய்யலாம். இந்த மசாலா சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் அளவில் ருசியாகவும் இருக்கும்.

உங்களுக்கு பன்னீர் புர்ஜி மசாலா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் புர்ஜி மசாலாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
MOST READ: கார்ன் மெத்தி மலாய் கிரேவி
தேவையான பொருட்கள்:
* பன்னீர் - 400 கிராம் (உதிர்த்துக் கொள்ளவும்)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 3 (அரைத்துக் கொள்ளவும்)
* இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
* சாட் மசாலா - 3/4 டீஸ்பூன்
* உலர்ந்த வெந்தய கீரை - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பச்சை பட்டாணி - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெண்ணெய் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெயைப் போட்டு உருக்கவும்.
* வெண்ணெய் உருகியதும், சீரகத்தைப் போட்டு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி, அரைத்த தக்காளியை ஊற்றி, மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். மசாலாவானது ஓரளவு கெட்டியானதும், அதில் பச்சை பட்டாணியை சேர்த்து கிளறி, ஒரு கப் நீர் ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, எண்ணெய் தனியாக பிரியும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்பு அதில் உதிர்த்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து கிளறி, மேலே உலர்ந்த வெந்தய கீரை மற்றும் சாட் மசாலா, கரம் மசாலா சேர்த்து கிளறி, ஒருமுறை கொதிக்க வைத்து மேலே கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பன்னீர் புர்ஜி மசாலா தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications