Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்!
பள்ளிப்பாளையம் காளான் ப்ரை
பள்ளிப்பாளையம் ரெசிபிக்களில் காளான் ப்ரை மிகவும் சூப்பராக இருக்கும். பள்ளிப்பாளையம் காளான ப்ரை சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, புல்கா, புலாவ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும்.
தமிழ்நாட்டில் பள்ளிப்பாளையம் ரெசிபிக்கள் மிகவும் பிரபலமானது. பள்ளிப்பாளையம் என்பது ஈரோடு மாவட்டத்தில் உள்ளது. இந்த பள்ளிப்பாளையம் ரெசிபிக்களில் காளான் ப்ரை மிகவும் சூப்பராக இருக்கும். பள்ளிப்பாளையம் காளான ப்ரை சாதத்துடன் மட்டுமின்றி, சப்பாத்தி, புல்கா, புலாவ் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். குறிப்பாக இந்த காளான் ப்ரை குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு பள்ளிப்பாளையம் காளான் ப்ரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பள்ளிப்பாளையம் காளான் ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காளான் - 200 கிராம்
* தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 5
* கறிவேப்பிலை - சிறிது
* சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (நறுக்கியது)
* தேங்காய் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் நறுக்கிய காளான் மற்றும் தேங்காய் துண்டுகளை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் உப்பு, மஞ்சள் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் 1/4 கப் நீரை ஊற்றி, மூடி வைத்து 2-3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* காளான் நன்கு வெந்ததும், இறக்கி மேலே சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிது மிளகுத் தூள் தூவி இறக்கினால், சுவையான பள்ளிப்பாளையம் காளான் ப்ரை தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications