Latest Updates
-
நவம்பர் 14, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் -
கேது கடக ராசிக்குள் செல்வதால் 18 மாதங்களுக்கு நரகத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2026 ராகு-கேது பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? -
4 முட்டையும், 1 கப் தயிரும் இருந்தா இந்த பஞ்சாபி மசாலாவை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு பக்காவா இருக்கும் -
தூங்க செல்வதற்கு முன் பாதத்தில் தேங்காய் எண்ணெயை தடவினால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
உங்கள் இரத்தப் பிரிவு உங்கள் குணங்களைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா? -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க செய்த சத்தியத்தை எப்போதும் காப்பாற்ற மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாகர்கோவில் கருப்பட்டி பணியாரம் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க... -
அதிக பனியால் சருமம் சொரசொரன்னு இருக்குதா? அப்ப இந்த ஸ்க்ரப்பை வாரம் 1 முறை யூஸ் பண்ணுங்க.. -
விடாப்பிடியான காபி மற்றும் டீ கறைகளை நீக்க உதவும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க - துணி புதுசு போல மாறிரும்
சப்பாத்திக்கு ஏற்ற பாலக் டோஃபு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
Palak Tofu Recipe In Tamil: நீங்கள் இதுவரை டோஃபு வாங்கி சமைத்துள்ளீர்களா? உங்களுக்கு டோஃபு என்றால் என்னவென்றே தெரியாதா? டோஃபு என்பது பன்னீர் போன்று இருக்கும். ஆனால் பன்னீர் பால் கொண்டு செய்யப்படுவது. அதுவே டோஃபு சோயா பால் கொண்டு தயாரிக்கப்படுவதாகும். இந்த டோஃபு அனைத்து சூப்பர் மார்கெட்டுகளிலும் கிடைக்கும். லாக்டோஸ் சகிப்புத் தன்மை கொண்டவர்களுக்கு இந்த டோஃபு மிகச்சிறந்த புரோட்டீன் உணவாகும். இதனை பசலைக்கீரையுடன் சேர்த்து கிரேவி செய்யும் போது, சுவை பிரமாதமாக இருக்கும். அதுவும் இதை சப்பாத்தி, பூரி என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
உங்களுக்கு இந்த பாலக் டோஃபு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாலக் டோஃபு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பட்டை - 3 இன்ச்
* பிரியாணி இலை - 1
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* டோஃபு - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* தண்ணீர் - தேவையான அளவு
* பால் - 1/2 கப்
* சோள மாவு - 1 டீஸ்பூன்
பசலைக்கீரை சமைக்க...
* பசலைக்கீரை/பாலக் - 4 கப் (நறுக்கியது)
* பூண்டு - 2 பற்கள்
* பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது)
* தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் பசலைக்கீரை, பூண்டு, பச்சை மிளகாய், 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 5-7 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். பசலைக்கீரை நன்கு வெந்ததும், அதனை இறக்கி மத்து கொண்டு நன்கு கடைந்து கொள்ளலாம் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளலாம்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பட்டை, பிரியாணி இலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மசாலாப் பொடிகள் அனைத்தையும் சேர்த்து கிளறி, பின் அரைத்து வைத்துள்ள பசலைக்கீரையை சேர்த்து கிளறி, 5-8 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும்.
* பிறகு அதில் தண்ணீர் ஊற்றி கிரேவி போன்று செய்து, பின் அதில் டோஃபுவை சேர்த்து கிளறி, தேவையான அளவு உப்பு போட்டு மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
* பின் பாலில் சோளமாவை சேர்த்து கலந்து, கிரேவியுடன் சேர்த்து பச்சை வாசனை போக நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், பாலக் டோஃபு ரெடி!!!



Click it and Unblock the Notifications
