Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
பேச்சுலர்களுக்கான ஈஸியான.. மஞ்சள் வெங்காய சட்னி
இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு வித்தியாசமான, அதே வேளையில் ஈஸியான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அப்படியானால் மஞ்சள் வெங்காய சட்னியை செய்யுங்கள்.
இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அதற்கு ஒரு வித்தியாசமான, அதே வேளையில் ஈஸியான சைடு டிஷ் செய்ய வேண்டுமா? அப்படியானால் மஞ்சள் வெங்காய சட்னியை செய்யுங்கள். இந்த மஞ்சள் வெங்காய சட்னியை இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, உங்களுக்கு விருப்பமான பிற உணவுகளுடனும் சேர்த்து சாப்பிடலாம். இந்த சட்னி செய்வதற்கு சுபலமானது என்பதால், காலை வேளையில் இதை முயற்சிக்கலாம். முக்கியமாக பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்ற ஈஸியான ரெசிபி.

உங்களுக்கு மஞ்சள் வெங்காய சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மஞ்சள் வெங்கா சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4-5
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
* புளி - 1 சிறிய துண்டு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த எண்ணெயில் வெங்காயத்தைப் போட்டு ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியைப் போட்டு நன்கு வதக்கி, சுவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் மற்றும் புளியை சேர்த்து நன்கு மென்மையாக வதக்கி இறக்க வேண்டும்.
* அடுத்து, வதக்கியதை நன்கு குளிர வைத்து, பின் மிக்சர் ஜாரில் போட்டு தேவையான அளவு சிறிது நீரை ஊற்றி நன்கு அரைத்து ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றி கிளறினால், மஞ்சள் வெங்காய சட்னி தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications

