Latest Updates
-
நவம்பர் 14, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் -
கேது கடக ராசிக்குள் செல்வதால் 18 மாதங்களுக்கு நரகத்தை அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2026 ராகு-கேது பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்? -
4 முட்டையும், 1 கப் தயிரும் இருந்தா இந்த பஞ்சாபி மசாலாவை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு பக்காவா இருக்கும் -
தூங்க செல்வதற்கு முன் பாதத்தில் தேங்காய் எண்ணெயை தடவினால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
உங்கள் இரத்தப் பிரிவு உங்கள் குணங்களைப் பற்றி என்ன சொல்கிறது தெரியுமா? -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க செய்த சத்தியத்தை எப்போதும் காப்பாற்ற மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாகர்கோவில் கருப்பட்டி பணியாரம் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க... -
அதிக பனியால் சருமம் சொரசொரன்னு இருக்குதா? அப்ப இந்த ஸ்க்ரப்பை வாரம் 1 முறை யூஸ் பண்ணுங்க.. -
விடாப்பிடியான காபி மற்றும் டீ கறைகளை நீக்க உதவும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க - துணி புதுசு போல மாறிரும்
சிம்பிளான... வெங்காய சப்ஜி
சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வெங்காயம், தக்காளி, தேங்காயைத் தவிர வேறு எதுவும் இல்லையா? அப்படியானால் இந்த மூன்று பொருளைக் கொண்டு அட்டகாசமான ஒரு சைடு டிஷ் செய்யலாம்.
சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வெங்காயம், தக்காளி, தேங்காயைத் தவிர வேறு எதுவும் இல்லையா? அப்படியானால் இந்த மூன்று பொருளைக் கொண்டு அட்டகாசமான ஒரு சைடு டிஷ் செய்யலாம். அது தான் வெங்காய சப்ஜி. இந்த வெங்காய சப்ஜி சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி, சாதத்திற்கும் நன்றாக இருக்கும். மேலும் இது பேச்சுலர்களும் செய்வதற்கு ஏற்ற ஒரு எளிமையான சைடு டிஷ்.

இப்போது சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் வெங்காய சப்ஜியை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெங்காயம் - 3 (நீளமாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4-5
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு டேபிள் ஸ்பூன்
* தக்காளி - 2 (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தேங்காய் - அரை கப் (துருவியது)
* சோம்பு - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மிக்ஸர் ஜாரில் தேங்காய் மற்றும் சோம்பு விதைகளைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கி, பின் பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, சில நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
* பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.
* அடுத்து தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து சிறிது நீர் ஊற்றி, குறைவான தீயில் 2 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து இறக்கினால், வெங்காய சப்ஜி தயார்.
குறிப்பு:
* வீட்டில் தக்காளி இல்லாவிட்டால், இறுதியில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்துக் கொள்ளுங்கள்.
* சப்ஜியின் சுவையை மேலும் கூட்ட வேண்டுமானால், பொட்டுக்கடலை அல்லது முந்திரியை தேங்காயை அரைக்கும் போது சேர்த்துக் கொள்ளலாம். இதனால் சப்ஜி சற்று கெட்டியாக இருக்கும்.
* வெங்காய சப்ஜி சப்பாத்திக்கு மட்டுமின்றி ரொட்டி, புல்கா போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட ஏற்றதாக இருக்கும். வேண்டுமானால், அப்பம் அல்லது இடியாப்பம் போன்றவற்றுடனும் சாப்பிடலாம்.
IMAGE COURTESY: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
