Latest Updates
-
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும -
தென்னிந்தியாவின் அம்பானி என்று கூறப்படும் இந்த நடிகருக்கு புர்ஜ் கலீஃபாவில் சொந்த வீடு இருக்காம்-யார் தெரியுமா -
அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த ராசிக்கெல்லாம் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
ரோட்டுக்கடை தக்காளி குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 28, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகளை சந்திக்கப் போறாங்களாம் -
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
மதுரை நாட்டுக்கோழி வறுவல்
பிராய்லர் கோழியை விட நாட்டுக் கோழி தான் உடலுக்கு நல்லது. எனவே முடிந்த வரை பிராய்லர் வாங்கி சமைத்து சாப்பிடுவதைத் தவிர்த்து, நாட்டுக்கோழியை வாங்கி சமைத்து சுவையுங்கள். அதிலும் நாட்டுக்கோழியை மதுரை ஸ்டைலில் வறுவல் செய்து விடுமுறை நாட்களில் சுவைக்க அற்புதமாக இருக்கும்.
இங்கு மதுரை நாட்டுக்கோழி வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
நாட்டுக் கோழி - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2
சோம்பு பொடி - 1/4 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
கிராம்பு - 2
பட்டை - 2
ஏலக்காய் - 2
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
குழம்பு மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
முதலில் நாட்டுக் கோழியை நன்கு சுத்தமாக கழுவி, குக்கரில் போட்டு, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து, சோம்பு பொடி சேர்த்து வதக்க வேண்டும்.
பின்பு அதில் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு மென்மையாக வதக்கி, அத்துடன் வேக வைத்துள்ள சிக்கனை மட்டும் சேர்த்து, குழம்பு மிளகாய் தூள், மிளகுத் தூள் சேர்த்து நன்கு மசாலா கோழியுடன் ஒன்று சேர பிரட்டி விட வேண்டும்.
ஒருவேளை அடிப்பிடிப்பது போல் இருந்தால், அதோடு சிறிது சிக்கன் வேக வைத்த நீரை ஊற்றி, நன்கு பிரட்டி, கொத்தமல்லி தூவி கிளறி இறக்கினால், மதுரை நாட்டுக்கோழி வறுவல் ரெடி!!!



Click it and Unblock the Notifications
