For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ருசியான பூண்டு சிக்கன் ரைஸ் சமையல் செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்

பூண்டு சிக்கன் ரைஸ் வித்யாசமான முறையில் செய்யும் முறை இங்கே தரப்பட்டுள்ளது. படித்து பயன்பெறுங்கள்.

By Bala Karthik
|

உங்கள் வீட்டு குளிர்சாதன பெட்டியில் சிக்கன் இருக்குமெனில்...உங்களுடைய சமையல் பிரச்சனைகள் தானாகவே முடிவுக்கு வந்துவிடுகிறதாம். ஆம், இந்த சிக்கனை, சில எளிய பொருட்களை கொண்டு கலப்பதின் மூலமாக, நிறைய சிறந்த உணவுகள் நமக்கு கிடைக்கிறது.

அழற்சியை எதிர்க்கும் பண்பும், கிருமி நாசினி பண்பும் இந்த பூண்டுக்கு இருக்க, நம்முடைய இந்த டிஷ்ஷானது சக்தி வாய்ந்த ஒரு உணவு பொருளாகவும் அமைகிறது. இவ்வாறு சிறந்த பலன்களை அளிக்கும் பூண்டு, சிக்கன் என பலவற்றை கொண்டு இந்த ரெசிபியை தயாரிப்பது எப்படி என நாம் பார்க்கலாம்.

இந்த சமையலை ஞாயிற்று கிழமை செய்து பார்த்து, உங்கள் ப்ரஞ்ச் (BRUNCH) உணவாக குடும்பத்துடன் சேர்ந்து தான் இதனை உண்ணுங்களேன். அவ்வாறு அவர்கள் டேஸ்ட் பார்த்துவிட்டால், கண்டிப்பாக இன்னும் அதிகமாகவே வாங்கி சாப்பிடுவார்கள் என்பதனை யாராலும் மறுக்க முடியாது. இப்பொழுது சமையல் முறையை பற்றிய குறிப்புகளை நாம் பார்க்கலாம்.

பரிமாற தேவை - 4 நபர்
தயாரிப்புக்கான நேரம் - 10 நிமிடங்கள்
சமையலுக்கான நேரம் - 15 நிமிடங்கள்.

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - ¼ கப் (நறுக்கப்பட்டது)
ரெட் பெல் மிளகு - ½ கப் (நறுக்கப்பட்டது)
பூண்டு பற்கள் - 4 (அரைக்கப்பட்டது)
அரிசி - ½ கப் (சமைக்கப்படாதது)
வெஜிடபிள் ஆயில் (காய்கறி எண்ணெய்) - 2 டீ ஸ்பூன்
லெமன் ஜூஸ் - ¼ கப்
கோழியின் நெஞ்சுப்பகுதி - 1 (போன்லெஸ் மற்றும் துண்டுகளாக வெட்டியது)
இஞ்சி - 2 டீ ஸ்பூன் (நறுக்கப்பட்டது)
சோயா சாஸ் - 2 டீ ஸ்பூன்
தேன் - 1 டீ ஸ்பூன்
கோழி குழம்பு - ½ கப்
ப்ரெஸ் கொத்துமல்லி - 1 டீ ஸ்பூன் (நன்றாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

1. ஒரு பௌலை எடுத்துகொண்டு அதில் சிக்கன், வெங்காயம், பூண்டு, இஞ்சி, எண்ணெய், உப்பு, மற்றும் லெமன் ஜூஸ் சேர்க்க வேண்டும். அதனை நன்றாக ஊறவைத்து, ஓரமாக வைத்துவிட வேண்டும். (30 நிமிடங்களிலிருந்து 1 மணி நேரம் வரை வைத்திருக்க வேண்டும்).
2. அதன் பின்னர், ஆழமான அடிப்பாகமுடைய குக்கரை எடுத்துகொண்டு அதில் அரிசியை சேர்க்க வேண்டும். அந்த அரிசி மென்மையாகும் வரை சமைக்க வேண்டும். பின் ஊற வைத்த சிக்கனை இத்துடன் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

3. அதன்பிறகு, ரெட் பெல் மிளகையும், சோயா சாஸையும் சேர்த்து மீண்டும் பிசைந்து கொள்ள வேண்டும். மேலும், கோழி குழம்பை அத்துடன் சேர்த்து, 5 லிருந்து 8 நிமிடங்கள் வரை அதனை மூடி வைக்க வேண்டும். (நன்றாக வேக வைப்பதற்காக)
4. கடாயை சோதித்து பார்த்து, அரிசி நன்றாக வேகவைக்கப்பட்டிருக்கிறதா? சிக்கன் மிருதுவாக இருக்கிறதா? என்பதனை சரிபார்த்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அதன்பின்னர், தேனையும், நறுக்கப்பட்ட கொத்துமல்லியையும் சேர்த்துகொள்ள வேண்டும்.
இப்பொழுது உங்களுடைய பூண்டு சிக்கன் ரைஸ் தயாராகி, சூடாக பரிமாறவும் உங்களை குதூகலத்துடன் வரவேற்கிறது.

English summary

Garlic Chicken Rice Recipe for Sunday special

Garlic Chicken Rice Recipe
Desktop Bottom Promotion