Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
முட்டையை வைச்சு வழக்கமான பொரியல் செய்யாம இந்த மாதிரி மசாலா பொரியலா செய்யுங்க... டேஸ்ட் தாறுமாறா இருக்கும்...
Muttai Masala Poriyal Recipe in Tamil: முட்டை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? விலை மலிவான அதேசமயம் ஆரோக்கியமான ஒரு உணவென்றால் அது முட்டைதான். முட்டையில் போதுமான அளவு புரதச்சத்துக்கள் நிறைந்துள்ளது. வாரத்திற்கு இரண்டு முறையாவது முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டை செய்வீர்களா?
எப்பொழுதும் முட்டையை வேக வைத்தோ, ஆம்லெட் போட்டோ, ஆப்பாயில் போட்டோ அல்லது வறுத்தோ சாப்பிடுகிறீர்களா? ஒரே மாதிரி முட்டை செய்து போராடிக்கிறதா? ஆம் எனில் நாங்கள் கூறும் இந்த வித்தியாசமான முறையில் முட்டை பொரியலை செய்து பாருங்கள். முட்டையை இந்த மாதிரி பொரியல் செய்து கொடுத்தால் முட்டை சாப்பிடாதவர்கள் கூட அதை விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு தக்காளி முட்டை பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தக்காளி முட்டை பொரியலின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- முட்டை - 4
- தக்காளி - 1
- பச்சை மிளகாய் - 1
- மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
- மிளகுத்தூள் - 1/4 ஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1/2 ஸ்பூன்
- இஞ்சி பூண்டு விழுது - 1/4 ஸ்பூன்
- கொத்தமல்லித் தழை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1/2 ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - 20
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- முட்டைகளை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதோடு உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
- வெங்காயம், மிளகாய் இரண்டையும் நீள வாக்கிலும், தக்காளியைப் பொடி பொடியாகவும் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பாதி வதங்கியதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- தக்காளி நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும் மிளகாய் தூள், மிளகு தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து ஒரு நிமிடம் கிளறவும்.
- மசாலா பச்சை வாசனை போகும் வரை மிதமான தீயில் வதக்கவும்.
- பிறகு கலக்கி வைத்துள்ள முட்டைகளை ஊற்றி வேகும் வரை நன்கு கிளறவும். பின்னர் கரண்டியை வைத்து சின்ன சின்ன துண்டுகளாக உடைத்து விடவும்.
- இறுதியாக கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றக கிளறி அடுப்பை அணைத்தால் சூப்பரான மசாலா முட்டை பொரியல் ரெடி!



Click it and Unblock the Notifications