Latest Updates
-
குடிமகன் ஒவ்வொருவரும் 9 கோடி சம்பாதிக்கும் உலகின் பணக்கார நாடு எது தெரியுமா? அமெரிக்கா இல்லை -
செப்டம்பர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரகாசத்தை கொண்டு வரப்போகுது! -
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்!
மஸ்ரூம் பாஸ்தா
உங்கள் குழந்தைகள் பாஸ்தாவை விரும்பி சாப்பிடுவார்களா? அவர்களுக்கு மாலை வேளையில் பாஸ்தா செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் மஸ்ரூம் பாஸ்தா செய்து கொடுங்கள்.
உங்கள் குழந்தைகள் பாஸ்தாவை விரும்பி சாப்பிடுவார்களா? அவர்களுக்கு மாலை வேளையில் பாஸ்தா செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் மஸ்ரூம் பாஸ்தா செய்து கொடுங்கள். இதில் காளான் மட்டுமின்றி, குடைமிளகாயும் இருப்பதால், குழந்தைகளுக்கு இது ஆரோக்கியமானதும் கூட. முக்கியமாக மஸ்ரூம் பாஸ்தா குழந்தைகள் மட்டுமின்றி, பெரியோர்களும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். உங்களுக்கு மஸ்ரூம் பாஸ்தா எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

ஏனெனில் கீழே மஸ்ரூம் பாஸ்தாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாஸ்தா - 3/4 கப்
* மஸ்ரூம்/காளான் - 1/4 கப்
* குடைமிளகாய் - 2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 1/2 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* உலர்ந்த கற்பூரவள்ளி இலை - ஒரு சிட்டிகை
* மிளகுத் தூள் - 1/8 டீஸ்பூன்
* துருவிய சீஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* மைதா - 1 டேபிள் ஸ்பூன்
* பால் - 1/2 கப்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் கொதிக்கும் நீரில் பாஸ்தாவைப் போட்டு, அதில் அரை டீஸ்பூன் எண்ணெய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, மென்மையாக வேக வைத்து இறக்கிக் கொள்ளவும். பின் நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
* பின்பு அதில் குடைமிளகாய் மற்றும் காளானை சேர்த்து கிளறி நன்கு காளான் வேகும் வரை ஒரு 3 நிமிடம் வேக வைக்கவும்.
* பின் அதில் மைதாவை சேர்த்து ஒருமுறை கிளறிவிட்டு, பால் ஊற்றி நன்கு கிளறி விடவும். அப்போது கலவையானது சற்று கெட்டியாகி இருக்கும். இந்நிலையில் அதில் உலர்ந்த கற்பூரவள்ளி இலைகளை சேர்த்து கிளறி விடவும்.
* இறுதியில் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து கிளறி, பின் அதில் மிளகுத் தூள் சேர்த்து ஒருமுறை பிரட்டி விட்டு, மேலே சீஸ் தூவி ஒருமுறை கிளறிவிட்டு இறக்கினால், சுவையான மஸ்ரூம் பாஸ்தா தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications