Latest Updates
-
சனி பகவானின் நட்சத்திரம் செல்லும் செவ்வாய்: செப்டம்பர் இறுதியில் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சொந்த கரன்சி, சொந்த ஏர்போர்ட் கூட இல்லாத உலகின் பணக்கார நாடு - இந்த நாட்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன்தான் இருக்காம் -
பச்சை பயறு இட்லியும், உளுந்து சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரும் நாளாக இருக்கப்போகுதாம் -
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா?
காளான் மஞ்சூரியன்
உங்கள் வீட்டில் காளான் உள்ளதா? அப்படியானால் மாலை வேளையில் அந்த காளானைக் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையுடன் காளான் மஞ்சூரியனை செய்து சாப்பிடுங்கள்.
உங்கள் வீட்டில் உள்ளோர் மாலை வேளையில் சாப்பிட ஸ்நாக்ஸ் ஏதாவது கேட்கிறார்களா? அதுவும் வாய்க்கு நல்ல விருந்தளிக்கும் வகையில் கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் காளான் உள்ளதா? அப்படியானால் அந்த காளானைக் கொண்டு ஒரு அட்டகாசமான சுவையுடன் காளான் மஞ்சூரியனை செய்து சாப்பிடுங்கள். இந்த காளான் மஞ்சூரியனை நீங்கள் இதுவரை ஹோட்டலில் தான் சுவைத்திருப்பீர்கள். ஆனால் இதை எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம்.

உங்களுக்கு காளான் மஞ்சூரியனை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் மஞ்சூரியன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பட்டன் காளான் - 250 கிராம் (இரண்டாக வெட்டிக் கொள்ளவும்)
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* ஸ்பிரிங் ஆனியன் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
சாஸ் தயாரிப்பதற்கு...
* சோள மாவு - 1 டீஸ்பூன்
* சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* தக்காளி கெட்சப் - 1 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/2 கப்
மாவு தயாரிப்பதற்கு...
* சோள மாவு - 3 டேபிள் ஸ்பூன்
* மைதா மாவு - 5 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/4 கப்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* ஒரு பௌலில் சாஸ் தயாரிப்பதற்கு கொடுத்துள்ள சோள மாவு, சில்லி சாஸ், தக்காளி கெட்சப், சோயா சாஸ் மற்றும் நீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* மற்றொரு பௌலில் சோள மாவு, மைதா, தண்ணீர், உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், காளானை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து, தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் சிறிது ஊற்றி சூடானதும், இஞ்சி, பூண்டு சேர்த்து சில நொடிகள் வதக்கி, பின் ஸ்பிரிங் ஆனியன், பச்சை மிளகாய் சேர்த்து சில நொடிகள் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் தயாரித்து வைத்துள்ள சாஸ் கலவையை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, ஓரளவு கெட்டியாகும் வரை கிளறி விட வேண்டும்.
* பின் அதில் பொரித்து வைத்துள்ள காளானை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி இறக்கினால், சுவையான காளான் மஞ்சூரியன் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications
