Latest Updates
-
தீபாவளிக்கு பேக்கரி ஸ்டைல் மைதா பிஸ்கட்டை செய்யுங்க.. 1 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
வெண்டக்காயை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பச்சடி செய்யுங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் 'வெங்காய தலைநகரம்' என்று அழைக்கப்படும் ஊர் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
Dhanteras 2026: தந்தேராஸ் நாளில் குறைந்த பட்ஜெட்டில் மகாலட்சுமியின் அருளைப் பெற வாங்க வேண்டிய 5 பொருட்கள்! -
வாஸ்து படி உங்களோட தங்க நகைகளை வீட்டின் திசையில் மட்டும் வைக்காதீங்க - இல்லனா அவ்வளவுதான் -
தீபாவளிக்கு பின் வக்ர நிவர்த்தி அடையும் சுக்கிரன்: இந்த 4 ராசிக்காரர்களின் கையில் பணம் குவியும்! -
கேது கடக ராசிக்குள் நுழைவதால் இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா -
மணமணக்கும் செட்டிநாடு நாட்டுக்கோழி கிரேவி - எப்படி செய்யணும் தெரியுமா? -
சங்கரா மீன் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
3 ஸ்பூன் வேர்க்கடலை இருந்தா பீர்க்கங்காயோட சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - தாறுமாறா இருக்கும
3 முருங்கைக்காய் இருந்தா.. இப்படி சுக்கா செய்யுங்க.. டேஸ்ட் டக்கரா இருக்கும்..
Murungakkai Sukka Recipe In Tamil: உங்கள் வீட்டில் முருங்கைக்காய் உள்ளதா? எப்போதும் முருங்கைக்காயைக் கொண்டு சாம்பார், புளிக்குழம்பு என்று தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை முருங்கைக்காய் இருந்தால், அதைக் கொண்டு சுக்கா செய்யுங்கள்.
இந்த முருங்கைக்காய் சுக்கா சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் என்று அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த சுக்கா செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். ஒருமுறை முருங்கைக்காயை இப்படி சுக்கா செய்தால், பின் வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்ய சொல்லிக் கேட்பார்கள்.

உங்களுக்கு முருங்கைக்காய் சுக்கா ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்காய் சுக்கா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 3 ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 7-8 பல் (இடித்தது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* முருங்கைக்காய் - 3 (நீளவாக்கில் நறுக்கியது)
* தண்ணீர் - 2 டம்ளர்
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து,
பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பூண்டு பற்களை நன்க இடித்து சேர்த்து வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, தக்காளி மென்மையாகும் வரை
வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மல்லித் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள் சேர்த்து
மிதமான தீயில் வைத்து நன்கு வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் நீளவாக்கில் நறுக்கிய முருங்கைக்காயை சேர்த்து
நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் 2 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து
மூடி வைத்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து கிளறி, பின் திறந்தவாக்கில்
நீர் வற்றும் வரை கிளறி விட்டு வேக வைத்து இறக்கி, கொத்தமல்லியைத்
தூவினால், சுவையான முருங்கைக்காய் சுக்கா தயார்.



Click it and Unblock the Notifications
