For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாசி பருப்பு கொசம்பரி ரெசிபி :கேசார் பீலி கொசம்பரி செய்வது எப்படி

பாசி பருப்பு கொசம்பரி ரெசிபி கர்நாடக மக்களின் சுவையான சாலட் ஆகும். இதை அவர்கள் சுப நிகழ்ச்சிகளின் போது செய்யும் உணவாகும். இதை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் படங்கள் மூலமும் பார்க்கலாம்.

Posted By: Suganthi Ramachandran
|

பாசிப்பருப்பு கொசம்பரி ரெசிபி கர்நாடக மக்களின் புகழ்பெற்ற சாலட் ரெசிபி ஆகும். இதை முக்கியமாக சுப நிகழ்ச்சிகளின் போது செய்து மகிழ்வர். இந்த கொசம்பரி சாலட் பாசி பருப்பை ஊற வைத்து மற்றும் காய்கறிகளான காரட், வெள்ளரிக்காய் மற்றும் மாம்பழம் இவைக் கொண்டு செய்யப்படும் உணவாகும். இதுவே மகாராஷ்டிரியன் பாசிப்பருப்பு கொசம்பிர் என்பர்

இந்த கேசார் பீலி கொசம்பரி வீட்டிலேயே எளிதாகவும் விரைவாகவும் செய்யக் கூடியது. இது புரோட்டீன்கள் நிறைந்த சாலட் நிறைய காய்கறிகளுடன் கூடிய சுவை மிகுந்த உணவாகும். இந்த கொசம்பரி ரெசிபியை எப்படி வீட்டில் செய்வது என்பதற்கான வீடியோ மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் பின்வருமாறு காணலாம.

பாசி பருப்பு கொசம்பரி வீடியோ

கொசம்பரி ரெசிபி,
பாசி பருப்பு கொசம்பரி ரெசிபி /கேசார் பீலி கொசம்பரி ரெசிபி செய்வது எப்படி /பாசி பருப்பு கொசம்பிர் ரெசிபி /பாசி பருப்பு சாலட் /கொசம்பரி ரெசிபி
பாசி பருப்பு கொசம்பரி ரெசிபி /கேசார் பீலி கொசம்பரி ரெசிபி செய்வது எப்படி /பாசி பருப்பு கொசம்பிர் ரெசிபி /பாசி பருப்பு சாலட் /கொசம்பரி ரெசிபி
Prep Time
1 Hours
Cook Time
5M
Total Time
1 Hours5 Mins

Recipe By: அர்ச்சனா வி

Recipe Type: சாலட்

Serves: 2

Ingredients
  • ஊற வைத்த பாசி பருப்பு - 200 கிராம்

    வெள்ளரிக்காய் (தோலுரித்து மற்றும் நறுக்கியது) - 1/2 மீடியம் வடிவம்

    காரட் (தோலுரித்து மற்றும் துருவியது) - 1 மீடியம் வடிவம்

    கிளி மூக்கு மாம்பழம் (நறுக்கியது) - 1/4 கப்

    தேங்காய் (துருவியது) - 2 டேபிள் ஸ்பூன்

    இஞ்சி (துருவியது) - 1/4 inch

    பச்சை மிளகாய் (நறுக்கியது) - 1 டேபிள் ஸ்பூன்

    ஆயில் - 1டேபிள் ஸ்பூன்

    கடுகு - 1 டேபிள் ஸ்பூன்

    பெருங்காயம் - 1/4 டேபிள் ஸ்பூன்

    கறிவேப்பிலை - 5-6

    லெமன் ஜூஸ் - 1/2 பிழிந்தது

    உப்பு தேவைக்கேற்ப

    கொத்தமல்லி இலைகள் (நறுக்கியது) - 1 டேபிள் ஸ்பூன்

Red Rice Kanda Poha
How to Prepare
  • 1.ஒரு பெளலில் ஊற வைத்த பாசி பருப்பை எடுத்து கொள்ளவும்.

    2.அதனுடன் நறுக்கிய வெள்ளரிக்காய், காரட் மற்றும் மாம்பழம் போன்றவற்றையும் சேர்க்கவும்.

    3.பிறகு தேங்காய் துருவல், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து வேக வைக்கவும்

    4.அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட வேண்டும்.

    5.கடுகு நன்றாக வெடித்த பிறகு கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தட்கா தயாரிக்கவும்.

    6.இந்த தட்காவை சாலட் (வேக வைத்த பருப்பு) உடன் சேர்க்கவும்.

    7.கொஞ்சம் லெமன் ஜூஸ் மற்றும் உப்பு சேர்க்கவும்.

    8.நன்றாக கலக்க வேண்டும்

    9.கொத்தமல்லி இலைகளை மேலே தூவி மறுபடியும் நன்றாக கலக்கவும்

Instructions
  • 1.பாசி பருப்பை ஊற வைப்பதற்கு முன் நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும்.
  • 2.ஒரு மணி நேரமாவது பாசிப்பருப்பை ஊற வைத்து மீதமுள்ள தண்ணீரை வடிகட்டி விடவும்.
  • 3.கடைசியில் உப்பு சேர்க்கவும். அப்போ தான் அதற்கு அப்புறம் தண்ணீர் வராது.
Nutritional Information
  • பரிமாறும் அளவு - 1 கப்
  • கலோரிகள் - 87
  • புரோட்டீன் - 4 கிராம்
  • கார்போஹைட்ரேட் - 9 கிராம்
  • சுகர் - 6 கிராம்
  • நார்ச்சத்து - 3 கிராம்
  • இரும்புச் சத்து - 6 %
  • விட்டமின் சி - 29%

படிப்படியான செய்முறை - பாசி பருப்பு கொசம்பரி செய்வது எப்படி

1.ஒரு பெளலில் ஊற வைத்த பாசி பருப்பை எடுத்து கொள்ளவும்.

2.அதனுடன் நறுக்கிய வெள்ளரிக்காய், காரட் மற்றும் மாம்பழம் போன்றவற்றையும் சேர்க்கவும்.

3.பிறகு தேங்காய் துருவல், இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து வேக வைக்கவும்

4.அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட வேண்டும்.

5.கடுகு நன்றாக வெடித்த பிறகு கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு தட்கா தயாரிக்கவும்.

6.இந்த தட்காவை சாலட் (வேக வைத்த பருப்பு) உடன் சேர்க்கவும்.

7.கொஞ்சம் லெமன் ஜூஸ் மற்றும் உப்பு சேர்க்கவும்.

8.நன்றாக கலக்க வேண்டும்

9.கொத்தமல்லி இலைகளை மேலே தூவி மறுபடியும் நன்றாக கலக்கவும்

[ 3.5 of 5 - 20 Users]
English summary

பாசி பருப்பு கொசம்பரி ரெசிபி /கேசார் பீலி கொசம்பரி ரெசிபி செய்வது எப்படி /பாசி பருப்பு கொசம்பிர் ரெசிபி /பாசி பருப்பு சாலட் /கொசம்பரி ரெசிபி

Moong dal kosambari is an authentic salad of Karnataka fame and is prepared mainly during festivals. It is also a part of the full thali meals in the Kannada cuisine.
Desktop Bottom Promotion